தப்லீக் ஜமாஅத்: 100 ஆண்டுகளாக உம்மத்தை உயிர்த்தெழுப்பும் தஃவத்துடைய உழைப்பு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இந்தத் தளம், தப்லீகீ ஜமாஅத்தின் வரலாற்றையும் அதன் தொடக்கம், விரிவாக்கம் ஆகியவற்றின் விபரங்களை முழுமையாகவும் நம்பகமான முறையிலும் வழங்குகிறது.
தப்லீகி ஜமாஅத் என்பது உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்புக்கு கொடுக்கப்பட்ட உத்தியோகபூர்வமற்ற பெயராகும். இந்த உழைப்பை சுமார் 100 மில்லியன் மக்கள் பின்பற்றுகிரார்கள். இது முஸ்லிம்களின் நம்பிக்கை (ஈமான்) மற்றும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றுவதிலும் மீண்டும் உயிர்ப்பிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது.

தப்லீகி ஜமாஅத் நவம்பர் 1926 (ஜுமாதுல் அவ்வல் 1345)ல் தொடங்கப்பட்டது. இஸ்லாமிய நாட்காட்டியின்படி, நவம்பர் 2023 (ஜுமாதுல் அவ்வல் 1445)ல், தப்லீகி ஜமாஅத் 100 ஆண்டுகளை அடைந்தது.

குறிப்பு: 2014 தப்லீகி ஜமாஅத் பிரிவு சிக்கல் குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்களுக்காக, அடுத்த கட்டுரை வாசிக்கவும்: தப்லீகி ஜமாஅத் பிரிந்ததின் 3 காரணங்கள்

தப்லீக் ஜமாஅத்: நிகழ்வுகளின் வரலாறு

இந்த வரலாறு உறுதிகரமான மூலங்களிலிருந்து பெற்று மௌலானா அப்துர்ரஹ்மான் cirebone Indonesia அவர்களால் தொகுக்கப்பட்டது. மௌலானா அப்துர்ரஹ்மான், மௌலானா இனாமுல் ஹசன் (ரஹ்)அவர்களின் நெருக்கமான நண்பராக இருப்பதற்கான வாய்ப்பை பெற்றார். தற்போது இந்துனேஷியாவுடைய ஷூரா ஜமாஅத் உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார். உலகின் மிக பெரிய முஸ்லிம் சமூகத்தை கொண்ட நாடு இந்துனேஷியாவாகும்

1886ஆம் ஆண்டு, மௌலானா இல்யாஸ் காந்தலவி பின் மௌவ்லானா முஹம்மத் இஸ்மாயில் (ரஹ்) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசஃபர்நகர் மாவட்டத்தில் காந்த்லா என்ற இடத்தில் பிறந்தார்கள்.

Source: Sawanih Hadrathji Tsalits, I/14

மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் மார்க்கப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள். அவர்களின் தந்தை மௌலானா முஹம்மத் இஸ்மாயில்(ரஹ்) அவர்கள், தாகமாக இருக்கும் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக தெருக்களில் காத்திருந்தவராக அறியப்பட்டவர். தண்ணீர் வழங்கிய பின்னர், இந்த சேவையை செய்யும் வாய்ப்பினை அளித்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி 2 ரக்அத் தொழுவார்கள். ஒரு நாள், வேலை தேடி வந்த மேவாத் பகுதியைச் சேர்ந்த சில தொழிலாளர்களை சந்தித்து அவர்கள் அந்த வேலை மூலம் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று கேட்டார்கள், ‘அதே தொகையை நான் தருகிறேன் ஆனால் நீங்கள் என்னிடம் கலிமா மற்றும் தொழுகையை கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று தன் கோரிக்கையை முன்வைத்தார்கள் . அவர்களும் உடன்பட்டார்கள், அதன் பின்னர் எப்பொழுதும் சுமார் 10 மேவாதி மாணவர்கள் அவர்களுடன் இருந்து கொண்டேயிருப்பார்கள். இவ்வாறு தான் பங்களாவாலி மஸ்ஜிதில் மத்ரசா துவங்கியது.

Source: Life and Mission of Maulana Ilyas(rah) , pages 4-5

மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் சகோதரர் மௌலானா முஹம்மத் (ரஹ்) அவர்கள் அதிகம் ‘திக்ர்’, இபாதத்தில் ஈடுபட்டு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்கும் பெரியார்களில் ஒருவர். மௌலானா கங்கோஹி (ரஹ்) அவர்களிடம் ஹதீஸ் படித்தார்கள். வஃபாத்தாவதற்கு முன் 16 வருடங்கள் வரை அவர்களது தஹஜ்ஜுத் தொழுகை விடுபடவில்லை. இறுதிவரை தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதார்கள். ‘இஷா’வுக்குப் பின் வித்ருடைய ‘ஸஜ்தா’வில் இறையடி சேர்ந்தார்கள்.

Source: Life and Mission of Maulana Ilyas (rah), page 18

மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் தாயார் பீ ஸஃபியா, தினமும் 5000 முறை துரூத் ஷரீஃப், 5000 முறை இஸ்ம்-எ -சாத் “அல்லாஹ்” , 1000 முறை “பிஸ்மில்லாஹி-ர்ரஹ்மானி ர்ரஹீம்” , 1000 முறை “ஹஸ்புனல்லாஹு-வ-நி’மல் வகீல்,” மன்சில், மற்றும் பல திக்ர்களை ஆயிரக்கணக்கான முறை செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். ரமளானில் இதுபோக ஒவ்வொரு நாளும் ஒரு குர்ஆனையும் மேலதிகமாக 10 ஜூஸுக்களையும் ஓதுவார்கள். இவ்வாறே ரமளானில் 40 முறை குர்ஆனை தமாம் செய்வார்கள்.

இவர்களின் விருப்பமான பிள்ளையாக மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். “அக்தர்! எனக்கு உன்னிடமிருந்து சஹாபாக்களின் வாசனை வருகிறது” என்று கூறுவார்கள்.  சில வேலை முதுகைத் தடவிக் கொடுத்து  “என்ன விடயம்? எனக்கு உன்னுடன்  சஹாபாக்கள் போன்ற உருவங்கள் நடந்து செல்வது தென்படுகிறது” என்று கூறுவார்கள்.

Source: Life and Mission of Maulana Ilyas (rah) , page 7.

மௌலானா அவர்கள் மிகுந்த இரையச்சமுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் பல மணி நேரம் தனிமையில் அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டிருப்பார்கள். நிஜாமுத்தீனில் இருக்கும் போது அவர்கள் “அரப்ஸரா” வின் முன்வாயல் ‘ஹஜ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா’ (ரஹ்) அவர்கள் இபாதத் செய்த இடத்தில் பகல் நேரத்தை கழிப்பார்கள்.

Source: Life and Mission of Maulana Ilyas (rah), page 20

1898 பிப்ரவரி 2 –ஷைஃகுல் ஹதீஸ் மௌலானா முஹம்மத் ஜக்கரிய்யா காந்தலவி பின் மௌலானா முஹம்மத் யஹ்யா (ரஹ்) அவர்கள் 1315 ஹிஜ்ரீ ரமளான் 10ல் பிறந்தார்கள். அவர் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் சகோதரனின் மகனாவார்.

Source: The seerah of Maulana Yahya (rah) page 294

தப்லீகி ஜமாஅத் வரலாறு
மௌலானா ஜக்கரிய்யா சாஹிப் (ரஹ்)

1898 பிப்ரவரி 26 –மௌலானா இஸ்மாயில் (ரஹ்) – (மௌலானா இல்யாஸ் அவர்களின் தந்தை) இறையடி சேர்ந்தார்கள் 

Source: Life and Mission of Maulana Ilyas (rah) , page 5

1917 மார்ச் 20 – மௌலானா யூஸுஃப் காந்தலவி பின் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள்.

Source: Life and Mission of Maulana Ilyas (rah), page 5 , I/80

Tablighi Jamaat History
மௌலானா யூஸுஃப் சாஹிப் (ரஹ்)

1918 பிப்ரவரி 8 –மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் காந்தலாஹ் வில் இருந்து நிஜாமுத்தீன் பங்களாவாலி மஸ்ஜிதிற்கு வந்து தங்கி வாழ்ந்தார்கள் (இச்சமயம் இவர்களது வயது 32ஆகும்) .
அக்காலத்தில் மஸ்ஜிதின் நாலாபக்கத்திலும் காடு தான் இருந்தது. ஒரு சிறிய அளவில் கட்டப்பட்ட மஸ்ஜித், அதனுள் ஓர் அறை மட்டுமே இருந்தது. மஸ்ஜித் / மத்ரசா எல்லாமே ஒன்றாக இருந்தது.. அங்கு மாணவர்களும் குறைவாகவே இருந்தார்கள். மேவாத் மற்றும் மேவாத் அல்லாத, மிக உயர்ந்த தர்பிய்யத் பெற்ற சில ஏழை மாணவர்கள் எப்பொழுதும் மௌலானா அவர்களுடனே இருப்பார்கள்.

Source: Sawanih Hadrathji Tsalits, I/24

மத்ரசாவின் அடிப்படை தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்ய எந்த வருமானமும் இருக்கவில்லை. மிகவும் நெருக்கடியில் நாட்கள் கழிந்தன. சிலவேளை பஞ்சமும், பசியும் ஏற்பட்டுவிடும். ஆனால் இந்நிலை மௌலானா வை எவ்விதத்திலும பாதிக்கவில்லை, ‘தவக்குல்’ உடனும் தைரியமாகவும் இருந்தார்கள். ஏராளமான செல்வத்தையும் , இலகுவான நிலைகளைத் தான் பயந்தார்கள்.

Source: Life and Mission of Maulana Ilyas (rah), page 19

1918 பிப்ரவரி 20 –மௌலானா இனாமுல் ஹஸன் பின் மௌலானா இக்ராமுல் ஹஸன் காந்தலவி, முழஃப்ஃபர் நகர், யூ. பீ. இந்தியாவை பிரப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் மருமகனாவார்.(சகோதரியின் மகன்)

Source: Sawanih Hadrathji Tsalits, I/172

Tablighi Jamaat History
மௌலானா இனாமுல் ஹசன் (ரஹ்)

1922 – ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் நியூ டெல்லி, இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களுக்கு தப்லீக் பணிக்காக தனது முழு வாழ்க்கையை அர்ப்பணிக்க உறுதியளித்த முதல் ஐந்து பேரில் இவர்களும் ஒருவராக இருந்தார்கள்.மௌலானா ஷாஹ் அப்துல் காதிர் ராய்பூரி (ரஹ்) அவர்களின் நான்காவது கலீஃபாவாக இருந்தாகள். தற்போது இவர்கள் தப்லீக் பணியின் முன்னோடிகளில் ஒருவராக உள்ளார்கள், மேலும் இவர்களின் சநத் (சங்கிலித்தொடர்) தப்லீக் ஜமாஅத்தின் மூன்று அமீர்களான மௌலானா இல்யாஸ், மௌலானா யூஸுஃப், மற்றும் மௌலானா இனாமுல் ஹஸன் ஆகியோருடன் இணைந்துள்ளது.

Source: The Life of Shaikh Zubayr (rah) Page 156

Tablighi Jamaat History
ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் (ரஹ்)

1920 – மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் பொதுவான முஸ்லிம்களிடமும் தாருல் உலூம் மாணவர்களிடமும் கூட
அறியாமை மற்றும் தீனற்ற நிலை யை கண்டு கலங்கினார்கள்.
ஒரு முறை, ஒரு இளைஞரை ‘இவர் மேவாத்துடைய இன்ன மக்தபில் குர்ஆனை முழுமையாக கற்றுக்கொண்டார் ‘ என்ற பாராட்டுக்குரிய கருத்துடன் மௌலானா அவர்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டது. ஆனால் அந்த இளைஞரின் தாடி செவியப்பட்டு, அவர் ஒரு முஸ்லிம் என்று அறியக்கூடிய அளவு கூட அவரது உடையும் தோற்றமும் இல்லாதிருப்பதை கண்டு மௌலானா அவர்கள் அதிர்ச்சியுற்றார்கள்.

Source: Life and Mission of Maulana Ilyas (rah) – S Abul Hasan Ali Nadwi

1926 ஏப்ரில் 29 – மௌலானா இல்யாஸ் (ரஹ் )அவர்கள் தன்னுடைய 40வது வயதில் பல ஆலிம்களுடன் புனித ஹஜ் பயணம் சென்றார்கள்.

Source: Sawanih Hadrathji Tsalits I/31

Mecca (Old Picture)
மக்கா (பழைய படம்)

1926 ஜூலை 20– மௌலானா இல்யாஸ் ரஹ் அவர்களின் ஹஜ் குழு இந்நாளில் இந்தியா விற்கு திரும்புவதாக இருந்தது. ஆனால் மௌலானா அவர்கள் மிகவும் கலக்கமாகவும் சிரமமாகவும் உணர்ந்ததால் இன்னும் சில நாட்கள் மதீனாவில் இருப்பதாக முடிவு செய்தார்கள்.

Source: Sawanih Hadrathji Tsalits, I/31

1926 – ஓர் இரவு மதீனா முனவ்வரா, நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளா ஷரீஃபினுள் மௌலானா இல்யாஸ் ரஹ் அவர்கள் கண் அயர்ந்து தூங்கி விட்டார்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் தோன்றி “ஹின்துஸ்தான் திரும்பி செல்லுங்கள், உங்களிடம் வேலை வாங்கப்படும்”. என்று பஷாரத் சொன்னார்கள்.

Source: Sawanih Hadrathji Tsalits, I/31

Tablighi Jamaat History
1920 மச்ஜிதுன் நபவி முன்னணி

1926 நவம்பர் – மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுடைய பிரயாணத்தில் இருந்து இந்தியா திரும்பி தனது 40வது வயதில் பகிரங்கமாக தஃவத் தப்லீகுடைய உழைப்பை ஆரம்பித்தார்கள்.

Source: Sawanih Hadrathji Tsalits,I/31

1930 –மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் மாணவராக இருந்த மௌலானா இனாமுல்ஹஸன் (ரஹ்) தனது 13ன்று வயதில் மௌலானாவுடன் தப்லீக் ஜமாஅத்தின் ஸஃபர்களில் ஈடுபட்டார்கள். மேலும் இவர்கள் நிஜாமுத்தீனின் ஒரு முகீமாகவும் இருந்தார்கள்.

Source: Sawanih Hadrathji Tsalits I/222, 248

1930 ஏப்ரல் 28-முதன்முதலாக தாருல் உலூம் ஸஹ்ரான்பூர், மத்ரசாவின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தஃவத்துடைய உழைப்பை அறிமுகப்படுத்தினார்கள்.

Source: Sawanih Hadrathji Tsalits 1/33

Tablighi Jamaat History
மழாஹிருல் உலூம் சஹராந்பூர்

1932 – தஃவத்துடைய உழைப்பை துவங்கி 6 வருடத்திற்குப்பின் முதல்முறையாக ஜமாஅத் உருவாக்கப்பட்டடது. அந்த இரு ஜமாஅத்தும்:

  • மௌலானா ஹாஃபிழ் மக்பூல் அவர்களுடைய ஜமாஅத் காந்தலாவிற்கு அனுப்பப்பட்டது

  • மௌலானா தாவூத் மேவாத்தி யின் ஜமாஅத். ஸஹ்ரான்பூரிற்கு அனுப்பப்பட்டது

Source: Sawanih Hadrathji Tsalits, I/40

1933 ஏப்ரல் 25 – மௌலானா இப்ராஹீம் தேவ்லா சாஹிப் (தா.ப) , ஜம்பூசர், பரூச் பிரதேசம், குஜராத்தில் பிறந்தார்கள்.

Source: Discourses Of Maulana Ibrahim Dewla (d.b)

Tablighi Jamaat History
மௌலானா இப்ராஹிம் தேவ்லா

1934 ஆகஸ்ட் 2 – இந்த உழைப்பு எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்று ஒரு மஷூரா நடைப்பெற்றது. (48 வயதாகிய) மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களும் (36 வயதில் இருந்த) மௌலானா ஜகரிய்யா (ரஹ்) அவர்களும் மஷூராவை நிகழ்த்தினார்கள்.இதில் தான் தப்லீகின் ‘6 ஷிஃபாத்’ ஏற்றுக் கொள்ளப்பட்டது. (அறிந்துகொள்ள வேன்டிய விடயம் யாதெனில் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் 60பது ஷிஃபாத்களை முன் வைத்தார்கள்) இறுதியில் 6 ஷிஃபாத்கள் முடிவு செய்யபட்டது.
தற்போதைய 6 ஷிஃபாத்கள்:

  1. கலிமா
  2. தொழுகை
  3. இல்மு, திக்ர்
  4. இக்ராமுல் முஸ்லிமீன்
  5. இஃக்லாஸ்
  6. தஃவதுத் தப்லீக்

Source: Sawanih Hadrathji Tsalits, I/36

1939 நவம்பர் 8 – மௌலானா ஹாரூன் காந்தலவி பின் மௌலானா யூஸுஃப் பின் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் பிறந்தாகள். (மௌலானா ஸஃத் அவர்களின் தந்தை)

Source: The Tadzkirah of Maulana Haroon, Page 23

Maulana Haroon (Father of Maulana Saad)
மௌலானா ஹாரூன் சாஹிப்

1941 மே 28 – மௌலானா தல்ஹா சாஹிப் , மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்)அவர்களின் மகன், பிறந்தார்கள்.

Source: The Life of Shaikh Zubayr (rah) Page 133

மாவுலானா ஸாகரிய்யா பிறந்த வீடு
மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்)பிறந்த வீடு

1941 நவம்பர் 30 – முதல் முறையாக இஜ்திமா மேவாத்தில் நடத்தப்பட்டது, இதில் 25,000 பேர் கலந்து கொண்டனர். மௌலானா ஹுசைன் அஹ்மத் மதனி (ரஹ்)மற்றும் முஃப்தி கிஃபாயத்துல்லாஹ் (ரஹ்) உட்பட பல மூத்த உலமாக்களும் கலந்து கொன்டார்கள்.

Source: Life and Mission of Maulana Ilyas (rah), Page 62

1942 – முதல் மஸ்தூராத் (பெண்கள்) ஜமாஅத் அமைக்கப்பட்டது, அதில் மௌலானா தாவூத் மேவாத்தி அமீராக இருந்தார். மௌலானா யூஸுஃப் (ரஹ்) மற்றும் மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) உட்பட பல உலமாக்கள், முதலில் இப்படிப் பட்ட ஒரு ஜமாஅத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இந்த ஜமாஅத்தின் முழு தர்தீப் மற்றும் முறையை விளக்கப் படுத்திய பின், அவர்கள் அதை முழுமையாக ஆதரித்தனர்.

Source: Sabilul Khairath fiJama’atil Mutanaqqibat, Page 262.

1944 ஜனவரி –அப்போது 22 வயதாக இருந்த ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் முதன்முதலில் நிஜாமுத்தீன் மர்கஸுக்கு சென்று தஃவா பணியில் இணைந்தார்கள். மௌலானா இல்யாஸ் (ரஹ்)அவர்களின் மறைவுக்கு முன், 6 மாதங்கள் மௌலானாவின் சகவாசத்தில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள்.



Source: The Life of Maulana Zubayr (rah), Page 156

1944 மே முதல் ஜூலை – அந்த மாதம் முழுவதும், மௌலானா இல்யாஸ் (ரஹ்)அவர்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொன்டே சென்றது..

அந்த நேரத்தில், மூத்த மற்றும் முக்கிய உலமாக்கள் மத்தியில் , மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, தப்லீக் ஜமாஅத்தின் அமீர் பொறுப்பை யார் ஏற்க வேண்டும்? என்ற ஒரு பொதுவான கேள்வியும் கவலையும் இருந்தது.

ஷேஃக் அபுல் ஹசன் அலி நத்வி, மௌலானா ஷாஹ் அப்துல் காதிர் ராய்பூரி, மௌலானா ஜஃபர் அஹ்மத் உஸ்மானி, ஹாஃபிஸ் பஃ’ருத்தீன், மௌலானா ஃகலீல் அஹ்மத் ஸஹ்ரான்பூரி ரஹ்மதுல்லாஹி அலைஹிம் அஜ்ம’ஈன் உள்ளிட்ட பல முக்கிய உலமாக்களும், மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களை மதிக்கும் மற்ற அறிஞர்களும்—அவர்கள் தஃவா பணியில் அல்லது தனிப்பட்ட முறையில் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாக இருப்பினும்—நிஜாமுத்தீன் மர்கஸ் பள்ளிவாசலில் ஒன்று கூடி மஷூரா செய்தனர்.

இந்த உலமாக்களின் பார்வையில், தஃவா மற்றும் தப்லீக் ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க மிகவும் பொருத்தமானவர் ஷைஃகுல் ஹதீஸ் மௌலானா ஜகரிய்யா (ரஹ்) தான் என்ற எண்ணம் இருந்தது. அறிவு, ஆன்மிகம், நடைமுறை மற்றும் ஞானத்தில் உயர்ந்த நிலை, மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களை போல் இருக்கும் ஒரே நபர் இவரே என கருதினார்கள்.

பின்னர் அந்த மரியாதைக்குரிய உலமாக்கள், 46 வயதான ஷைஃகுல் ஹதீஸ் மௌலானா ஜகரிய்யா (ரஹ்) அவர்களைச் சந்தித்து, தங்களின் கருத்துக்களை அவர்களிடம் வெளிப்படுத்தினார்கள். மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) அவர்கள் தாழ்மையுடன் மறுத்து “இது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, அல்லாஹ் (ஸுப்ஹானஹூ வதஆலா) இதை ஏற்பாடு செய்வான்” எனப் பதிலளித்தார்கள்.

Source: Sawanih Hadrathji Tsalits, I/68

1944 ஜூலை 11 -மௌலானா இல்யாஸ் (ரஹ்), தன் மறைவிற்கு 2 நாட்களுக்கு முன், மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) மற்றும் ஷைஃக் அப்துல் காதிர் ராய்ப்பூரி ( ரஹ்) அவர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள். உலமாக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் எல்லோரும் ஒன்று கூடிய பின் மௌலானா கூறினார்கள் “உடனடியாக எனது வஃபாத்திற்குப்பின் பொறுப்பேற்கக் கூடியவர்களை தெரிவு செய்யுங்கள். அவர்கள் எனக்கு முன்னால் உறுதிமொழியளிக்க வேண்டும் . எனது தேர்வில் 6 நபர்கள் உள்ளனர்;
மௌலானா ஹாஃபிஸ் மக்பூல், மௌலானா தாவூத் மேவாத்தி, மௌலானா இஹ்திசாமுல் ஹஸன், மௌலானா யூஸுஃப் காந்தலவி, மௌலானா இனாமுல் ஹஸன், மௌலானா சையித் ரிழா ஹஸன் போபாலி.

தனிப்பட்ட முறையில் ஹாஃபிஸ் மக்பூல் அவர்களை முன்மொழிகிறேன். ஏனெனில் இவர் மிக நீண்ட காலமாக திக்ரிலும் உழைப்பிலும் ஈடுபடுபவராக இருக்கிறார்.”

மறுபுறம் மௌலானா ஷாஹ் அப்துல் காதிர் ராய்ப்பூரி (ரஹ்) மௌலானா யூஸுஃப் (ரஹ்) யை தஃவத் தப்லீகின் அடுத்த அமீராக மும்மொழிந்தார்கள். இந்த இரண்டு அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டபோது “யூஸுஃபை விட மேவாத்தி மக்களை யாரால் சமாளிக்க முடியும்” என்று மௌலானா இல்யாஸ் (ரஹ்) கூறினார்கள்.

இக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மௌலானா அப்துல் காதிர் ராய்ப்பூரி (ரஹ்) மௌலானா யூஸுஃப் (ரஹ்) யை தப்லீக் ஜமாஅத் தின் அடுத்த அமீராக தேர்வு செய்தார்கள். அந்த நேரத்தில் மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்களுக்கு 27 வயதாக இருந்தது.
மௌலானா இல்யாஸ் ( ரஹ்) “இதுதான் உங்களது தேர்வு என்றால், அல்லாஹ் (ஸுப்ஹானஹுவ தஆலா) இந்த முடிவில் ஃகைரையும் பரக்கத்தையும் ஏற்படுத்துவான், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். இதற்குமுன் எனக்கு மிகவும் தடுமாற்றமும் பயமும் இருந்தது, இப்போது மன அமைதி ஏற்பட்டுள்ளது.
இதற்கு பின் இந்தப் பணி நல்ல முறையில் தொடரும் என நம்புகிறேன்”.என்று கூறினார்கள்

பின்னர் மக்களிடம் பை’அத் எடுக்கும் அதிகாரத்தை மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்களுக்கு மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) மற்றும் மௌலானா இல்யாஸ் (ரஹ்) எழுத்துப் பூர்வமாக வழங்கினார்கள்.

Source: Sawanih Hadrathji Tsalits, I/65

மௌலானா இல்யாஸ் மௌலானா யூசுப் அவர்களுக்கு பையாஹ் எழுதிக்கொள்வதற்கு அனுமதி வழங்கினார்
மௌலானா இல்யாஸ் மௌலானா யூஸுஃப் அவர்களுக்கு பை’அத் எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கினார் (ஓவியம் மட்டுமே)

Source: Sawanih Hadrathji Tsalits, I/66

1944 ஜூலை 13 –மௌலானா இல்யாஸ் (ரஹ்) பங்களாவாலி மஸ்ஜிதில் வஃபாத்தானார்கள்.பங்களாவாலி மஸ்ஜிதின் வெளியே,மையப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இவ்வுழைப்பின் இரண்டாவது அமீராக மௌலானா யூஸுஃப் சாஹிப் (ரஹ்), அனைத்து உறுப்பினர்களின் ஆலோசனையின் மூலம் நியமிக்கப்பட்டார்கள். மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) அவர்களின் தலைமையில், மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் தலைப்பாகையை மௌலானா யூஸுஃப் அவர்களின் தலையில் அணிவிக்கப்பட்டது. மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்களின் முதல் பயான் பங்களாவாலி மஸ்ஜிதின் முற்றத்தில் உள்ள மரத்தடியில் நடைபெற்றது.

Source: Sawanih Hadrathji Tsalits, I/66

தப்லீக் ஜமாஅத்: மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்களின் காலம்

1946 – மௌலானா யஸுஃப் (ரஹ்) முதன்முறையாக ஒரு ஜமா’அத்தை குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தில் பனியாற்ற சவுதி அரேபியாவிற்கு அனுப்பினார்கள.

Source: Sawanih Maulana Yusuf (rah), Page 411

1946 – மௌலானா யூஸுஃப் (ரஹ்) மௌலானா உபைதுல்லாஹ் பெல்யாவி அவர்களை அரபிகள் மத்தியில் தஃவத்துடைய உழைப்பை மதீனாவின் உள்ளூரில் தங்கி பனியாற்றுவதற்காக அனுப்பிவைத்தார்கள்.
பின்னர் இவர்களின் இடத்தை மௌலானா சஈத் அஹ்மத் ஃகான் (ரஹ்) ஏற்றார்கள்.

Source: Life of Maulana Zubayr (rah), Page 148

மௌலானா சயீத் அஹ்மத் கான் சாஹிப்

1947 ஆகஸ்ட் 15 – இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பயத்தினால் இஸ்லாத்தை விட்டு வெளியேறினர். பல உயிர்கள் இழக்கப்பட்டது. அனைத்து மஷாஇஃக் மார்களும் அல்லாஹ் ஸுப்ஹானஹுவ த’ஆலாவிடம் அழுது மன்றாடினார்கள். மேவாத் மக்களின் ஒரு பெருங்கூட்டம் நிஜாமுத்தீன் மர்கஸில் அடைக்கலமாயினர். ஹத்ரத் மௌலானா யூஸுஃப் (ரஹ்) , மௌலானா மஞ்சூர் நுஃமானி, மௌலானா ஹபீபுர்ரஹ்மான் லுத்யன்வி சாஹிப் மற்றும் மௌலானா ஜக்கரியா (ரஹ்மதுல்லாஹி அலைஹிம் அஜ்ம’ஈன்) முஸ்லிம்கள் இந்தியாவை விட்டுச்செல்லக் கூடாது என முடிவு செய்தனர்.அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதாக தீர்மானிக்கப்பட்டது. மௌலானா ஜக்கரியா ( ரஹ்) ஃபத்வா கவுன்சிலிடம் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு செல்லக்கூடாது என்று ஃபத்வா வெளியிடுமாறு வலியுறுத்தினார்கள். இந்த ஃபத்வா வெளியிடப்படவில்லயெனில் இன்று இந்தியாவில் முஸ்லிம்களே இருந்திருக்க மாட்டார்கள்.

Source: Sawanih Hadhratji Tsalits, 1/121, 129

1947ல் இந்தியா விட்டே முஸ்லிம்கள் ஓடுகின்றனர் (படம்: அமிரிதர் பயணம் படுகொலை)
1947ல் இந்தியாவை விட்டு முஸ்லிம்கள் வெளியேரும்போது (படம்: அமிரிதர் ரயில் படுகொலை)

1947 ஆகஸ்ட் – மௌலானா யூஸுஃப் (ரஹ்) முர்தத் ஆகிய முஸ்லிம்களை மீண்டும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுப்பதற்காக கடினமாக உழைப்பில் ஈடுபடக்கூடிய பல ஜமா’அத்களை வெளியாக்கினார்கள். அந்த ஜமா’அத்தினர் அல்லாஹ்வின் பாதையில் தங்களது உயிரையும் கொடுக்க தயாராக இருந்தார்கள்.

Source: Sawanih Maulana Yusuf (rah), Page 306.

1947 ஆகஸ்ட் 24 – மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்கள் பாகிஸ்தானில் குடியேறி, அங்கு முயற்சியில் ஈடுபடக்கூடிய கடினமாக உழைக்கும் இன்னுமொரு ஜம்அத்தை அனுப்பி வைத்தார்கள். ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் அவர்களும் இந்த ஜம்’அத்தில் பங்கேற்றார்கள். தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டங்களும் ஏற்பட்டன, தங்களது அபாயகரமான நிலமைகளை கடிதம் மூலமாக தெரிவித்தார்கள்.

ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் (அப்போது 25 வயது) அங்கிருந்து லாஹோர், ரய்விந்த் மர்கஸ், பாகிஸ்தானில்
குடியமர்ந்தார்கள்.

1947 செப்டம்பர் 15 – மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்களின் மனைவி மக்ரிப் தொழுகையில், சஜ்தாவுடைய நிலையில் இறையடி சேரந்தார்கள். அப்போது அவர்களின் மகன் மௌலானா ஹாரூன் 8 வயதில் இருந்தார்கள்.

Source: Tadzkirah Maulana Haroon, Page 31

மௌலானா யூசுப் அவர்கள் சுஜூதில் இறந்தார் (ஓவியம் மட்டும்)
மௌலானா யூஸுஃப் அவர்களின் மனைவி சுஜூதில் வஃபாத் ஆனார்கள்

1947 டிசம்பர் 26 – இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபின், முதல் இஜ்திமா கராச்சியில் நடைபெற்றது.

Source: Sawanih Maulana Yusuf, Page 380.

1948 மார்ச் 13 – பாகிஸ்தானில் ஒரு இஜ்திமா நடைபெற்றது, பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்த பிறகு மௌலானா யூஸுஃப் (ரஹ் ) அவர்கள் முதன்முதலாக கலந்துகொண்டார்கள். இந்த இஜ்திமாவின் போது, பாகிஸ்தானின் மர்கஸ் ரைவிந்த், லாஹூர் ஆக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது.

Source: Sawanih Hadhratji Tsalits, I/106.

1948 டிசம்பர் – மௌலானா ஜக்கரிய்யா(ரஹ்) “ஸதகாவின் சிறப்புகள்” என்ற கிதாபை எழுதி முடித்தார்கள்.

Source: Answering the Objections on Fadhail Amal, Page 15.

1950 மார்ச் 30 – மௌலானா இனாமுல் ஹசன் ( ரஹ்) அவர்களின் மகன் மௌலானா ஜுபைருல் ஹஸன் காந்தலவி பிறந்தார்கள்.

Source: Ahwal wa Atsar, Page 29.

மவ்லானா ஜுபைருல் ஹசன் (டப்ளிகி ஜமாத் வரலாறு)
மௌலானா ஜுபைருல் ஹசன்

1954 ஜனவரி 11 – பங்களாதேஷ் உருவாகுவதற்கு முன், கிழக்கு பாகிஸ்தானின் ‘தாகா’வில் முதல் இஜ்திமா நடைபெற்றது. மௌலானா யூஸுஃப் (ரஹ்) மற்றும் மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்)இந்த இஜ்திமாவில் கலந்து கொண்டார்கள்.

Source: Sawanih Hadrat Maulana Yusuf(rah) Page 385.

1954 ஏப்ரல் 10 – முதல் ரைவிந்த் இஜ்துமா நடைப்பெற்றது.

Source: Sawanih Hadrat Maulana Yusuf (rah) Page 376.

1960 – மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்கள் “ஹயாத்துஸ் ஸஹாபா” என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார்கள்

Source: Sawanih Hadhratji Tsalit, I/165

1962 ஆகஸ்ட் 16 – மௌலானா ஷாஹ் அப்துல் காதிர் ராய்ப்புரி (ரஹ் ) வஃபாத்தானார்கள். அவர்கள் பிரபலமான ஷைஃக் ஆகவும், டெல்லியிலிருந்து சவூதி அரேபியாவிற்குச் சென்ற மூன்றாவது நடைப் பயண ஜமா’அத்தின் அமீராகவும் இருந்தார்கள். அந்த ஜமாஅத்தில் இளம் வயதுடைய மௌலானா ச’ஈத் அஹ்மத் ஃகான் (ரஹ்) அவர்களும் இணைந்திருந்தார்கள்.

Source: Ahwal wa Atsar, Page 89.

மவ்லானா ஷா அப்துல் காதிர் ராய்புரி (டப்ளிகி ஜமாத் வரலாறு)
மௌலானா ஷா அப்துல் காதிர் ராய்புரி

1965 ஏப்ரல் 12 – மௌலானா யூஸுஃப் (ரஹ் ) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:50 மணிக்கு லாஹூரில் வஃபாத்தானார்கள். அப்போது அவர்களுக்கு 48 வயதாக இருந்தது. மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்களின் அருகில் இருந்து சூரா யாசீன் ஓதினார்கள். மௌலானா யூஸுஃப் (ரஹ் )தனது கடைசி மூச்சு வரை ஷஹாதத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தார்கள் . பின்னர் அவர்களின் தந்தை மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் கப்ரின் அருகே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

Source: Sawanih Hadhratji Tsalits, I/274

மௌலானா இனாமுல்ஹஸன் (ரஹ்) அவர்களின் காலம்.

1965 ஏப்ரல் 12 –மௌலானா ஜக்கரிய்யா (ரஹ் )அவர்களின் தலைமையில் ஒரு மஷூரா நடத்தப்பட்டது. அந்த மஷூராவில் மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்களை தப்லீகுடைய உழைப்பின் மூன்றாவது அமீராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. மௌலானா உமர் பாலன்பூரி (ரஹ்)அவர்களின் பயானுக்குப் பிறகு, மஷூராவின் முடிவை மௌலானா பஃருத்தீன் தேவ்பந்தி (ரஹ்)அவர்கள் அறிவித்தார்கள்.

Source: Sawanih Hadhratji Tsalits, I/274

1965 ஏப்ரல் – ஒரு ஃபித்னா வெளிப்பட்டது. மேவாத்தியர்களின் ஒரு கூட்டம் (26 வயதாக இருந்த) மௌலானா ஹாரூன் பின் யூஸுஃப் அவர்கள் தப்லீகின் அடுத்த அமீராக வர வேண்டும் என விருப்பப்பட்டார்கள். இக்கூட்டமும் டெல்லி நகரின் சிலரும் மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) அவர்களிடம் இந்த மஷூராவின் முடிவை மாற்றுமாறு பீடிக்கத் தொடங்கினர். மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) அவர்களிடம் கடிதங்கள் எழுதியும் அவரிடம் முறையிடுவதாலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) அவர்கள் மௌலானா ஹாரூன் அவர்களுக்கு அநியாயம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) அவர்கள் மஷூராவின் முடிவில் உறுதியாக நிலைத்திருந்தார்கள்.‘மௌலானா இனாமுல் ஹஸன் அவர்கள் மௌலானா யூஸுஃப் போன்றவர் இல்லை.’ என்று மக்கள் கூறினார்கள், இதற்கு மௌலானா ஜக்கரிய்யா ( ரஹ் )அவர்கள் பதிலளித்ததாவது, “இது உண்மைதான், ஆனால் மௌலானா யூஸுஃப் அவர்களுக்கு பின், மௌலானா இனாமுல் ஹஸன் போன்ற ஒரு அமீரை மீண்டும் கண்டுபிடிக்க முடியாது.”

Source: Sawanih Hadhratji Tsalits, I/276, 277

மவ்லானா ஹரூன் (டப்ளிகி ஜமாத் வரலாறு)
மௌலானா ஹாரூன்

1965 – மௌலானா ஹாரூன் அவர்கள் இந்த மஷூராவின் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். அவரை அமீராக ஆக்க வேண்டும் என வலியுறுத்தியவர்கள் இருந்தாலும், மௌலானா ஹாரூன் அவர்கள் இதனால் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. அவர் மனதிற்கு எந்தக் கவர்ச்சியும் ஏற்படவில்லை; மாறாக, மஷூராவின் முடிவை அவர் மனப்பூர்வமாகவும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார்கள். மஷூராவின் முடிவை பின்பற்றுவதின் முக்கியத்துவத்தைப் பற்றியும், மஷூராவின் முடிவே சரியானது என்பதையும், அவர்கள் தனது பயான்களில் கூறினார்கள்.

Source: Sawanih Hadhratji Tsalits, I/277

1965 ஏப்ரல் 3 – மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்)அவர்களது பை’அத் தொடங்கியது. மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்)அவர்களை தப்லீக் ஜமாஅத்தின் அமீராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இவர்கள் மௌலானா யூஸுஃப் (ரஹ்)அவர்களின் நண்பராகவும் அவர்களுடன் சிறு வயதிலிருந்து வஃபாத்தாகும் வரை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவராகவும், மேலும் மௌலானா இனாமுல் ஹஸன்(ரஹ்) , மௌலானா இல்யாஸ் (ரஹ்)அவர்களின் நேரடி மாணவராகவும் இருந்தார்கள். தப்லீகுடைய ஸஃபர்களில் பெரும்பாலும் மௌலானா இல்யாஸ் (ரஹ்)அவர்களுடன் இருந்ததன் மூலம், தஃ’வத்துடைய உழைப்பின் நுணுக்கங்களையும், வெளிப்பாடுகளையும் முழுமையாகப் புரிந்து கொன்டவராகவும் இருந்தார்கள்.

Source: Ahwal wa Atsar, Page 31

1965 மே 10மௌலானா ஸஃத் பின் மௌலானா ஹாரூன் காந்தலவி பிறந்தார்கள்.

மாௌலானா சaad
மௌலானா சஅ’த் சாஹிப்

1967 ஆகஸ்ட் 21 – மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் தப்லீக் ஜமாஅத்தின் அமீராக நியமிக்கப்பட்ட பிறகு, தஃவாவிற்காக தனது முதல் பயணத்தை வெளிநாட்டில் மேற்கொண்டார்கள். அந்த பயணத்தில் கொழும்பு, இலங்கையில் ஆகஸ்ட் 26 முதல் 30 வரை ஒரு இஜ்திமா நடைபெற்றது

Source: Ahwal wa Atsar, Page 159

1967 நவம்பர் – முதல் தடவையாக டொங்கி இஜ்துமா கிழக்கு பாகிஸ்தானில் நடத்தப்பட்டது.(பங்களாதேஷ் உருவாகுவதற்கு முன்)

Source: Sawanih Hadhratji Tsalits, II/452

1969 – மௌலானா இப்ராஹிம் தேவ்லா (தா.ப) அவர்கள் 36 வயதில் துருக்கி, ஜோர்தான், மற்றும் இராக்குக்கு ஒரு வருட ஜமா’அத்தில் சென்றார்கள். இந்த சஃபர் 19 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.

Source: Discourses of Maulana Ibrahim (d.b), Page 36

1971 மார்ச் 26 – பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்தது. இக்காலத்தில் பல முஸ்லிம்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்

Source: Sawanih Hadhratji Tsalits, I/441

1973 ஏப்ரல் 23 – மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) 75வது வயதில் மதீனா அல்முனவ்வராவிற்கு இடம் பெயர்ந்தார்கள்.

Source: The Life of Maulana Muhammad Yahya al-Kandahlawi (rah) Page 307.

1973 செப்டம்பர் 28 – மௌலானா ஹாரூன் காந்தலவி பின் மௌலானா யூஸுஃப் (மௌலானா ஸஃதுடைய தந்தை) 35வது வயதில், 13 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, ஒரு நோயால் பாதிக்கப்பட்டு வஃபாத்தானார்கள். அவரது ஜனாசா தொழுகையை 55வது வயதில் மௌலானா இனாமுல் ஹசன் (ரஹ்) நடத்தினார்கள். அப்போது, அவரது மகன் மௌலானா ஸஃத் சாஹிப் 8 வயதாக இருந்தார்கள்.

Source: Ahwal wa Atsar, Page 379

மௌலானா ஹாரூன் அவர்கள் சூனியத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது, ஏனெனில் அவரது மரணத்திற்கு முன் அவர் மிகவும் நலமாக இருந்தார், அவரிடம் எந்த முன்னோடி அறிகுறிகளும் காணப்படவில்லை. திடீரென ஏற்பட்ட நோயினால், அவர் கருப்பு வாந்தி எடுக்கத் தொடங்கினார்.

இதனால் எவ்வித தகுந்த காரணமும் இல்லாமல் வதந்திகள் வெளிவர ஆரம்பித்தன, அதாவது மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் தான் சூனியம் செய்தார்கள் என பேசப்பட்டது. இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். மேலும், இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களில் சிலர் மௌலானா ஹாரூன் அவர்களின் குடும்பத்தினரே ஆவார்கள், குறிப்பாக மௌலானா ஹாரூனின் மனைவி ஃகாலீதா (அதாவது மௌலானா ஸஃத் அவர்களின் தாயார்) உட்பட, இவர்கள் மௌலானா இஸ்ஹாருல் ஹஸன் (ரஹ்) அவர்களின் மகளாவார்கள்.

இது குறித்த விவரத்தை ஒரு கடிதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நிலைமையில், மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்), இந்த மூர்க்கமான குற்றச்சாட்டுகளை தாங்க முடியாமல், மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) அவர்களை அணுகினார்கள். அவர்களிடம், மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) போன்றே தாமும் மதீனாவில் குடியேறுவதற்காக அனுமதி கேட்டார்கள். ஆனால் மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்) இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்களை பொறுமையாக நிஜாமுத்தீன் பகுதியிலேயே இருந்து செயல்பட்டு அதற்கு கீழ்ப்படிந்து இருக்கவும் ஆலோசனை வழங்கினார்கள். இதற்கிணங்க, மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் நிஜாமுத்தீனிலேயே தங்கி செயல்பட்டார்கள்.

1974 ஆகஸ்ட் 9 – மௌலானா ஜுபைர் (ரஹ்) 25ஆவது வயதில் அல்லாஹ்வின் பாதையில் ஒரு வருட பயணத்தைத் தொடங்கினாரகள்.

Source: Sawanih Hadhratii Tsalits, I/239

1978 பிப்ரவரி 10 – மதீனாவில் வசித்த மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்), மௌலானா ஜுபைர் (ரஹ்) அவர்களுக்கு தமது தரீகாவில் பைய்’அத் பெற அதிகாரப்பூர்வ அனுமதி, அதாவது ஃகிலாஃபத் வழங்கினார்கள். இந்த நிகழ்வு மஸ்ஜிதுன் நபவியின் முன்னால் நடைபெற்றது.

Source: Ahwal wa Atsar, Page 98

மச்ஜிதுன் நபவி (பழைய புகைப்படம்)

மௌலானா ஜுபைர் (ரஹ்) நான்கு தரீகாக்களின் மஷாயிஃக்மார்களிடமிருந்து ஃகிலாஃபத் பெற்று இருந்தார்கள்:
(1) மௌலானா இனாமுல் ஹஸன்(ரஹ்). (2) மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்)
(3) மௌலானா ச’ஈத் அபுல் ஹசன் அலி நத்வி ( ரஹ் )
(4) மௌலானா இஃப்திகார்-உல் ஹஸன் (ரஹ்).

மௌலானா ஜுபைர் (ரஹ்) அவர்களின் பக்குவம், பேணுதலின் காரணமாக, தஸவ்வுஃபில் ஒரு சிறந்த சாதனையாளராக மதிக்கப்பட்டார்கள்.

Source: Ahwal wa Atsar, Page 107

1980 ஜூலை 27 – மௌலானா ஹாபிஸ் மக்பூல் (ரஹ்) வஃபாத்தானார்கள். இவர்கள், மௌலானா இல்யாஸ் (ரஹ்) 1932 இல் உருவாக்கிய முதல் ஜமாஅத்தின் ஆமீராக இருந்தார்கள். மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள், தப்லீக் உழைப்பிற்கு இவர்களைத்தான் தனக்கு அடுத்த ஆமீராக தேர்வு செய்ய விரும்பினார்கள். ஆனால், மௌலானா ஷாஹ் அப்துல் காதிர் ராய்பூரி ரஹ்மதுல்லாஹி அலைஹி மௌலானா யூஸுஃப் (ரஹ்)அவர்களை தேர்வு செய்தார்கள்.

Source: Ahwal wa Atsar, Page 387

1982 மே 24 –மௌலானா ஜக்கரிய்யா காந்தலவி ( ரஹ் ) மதீனா அல்-முனவ்வராவில் தனது 84ன்காவது வயதில் வஃபாத்தானார்கள். சஹாபாக்களின் கப்ருஸ்தானான ‘ஜன்னத்துல் பகீ’யில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அவர்களது வாயில் இருந்து வெளிவந்த கடைசி வார்த்தைகள் “அல்லாஹ்… அல்லாஹ்” என்பதே. மஃக்ரிபுடைய நேரத்திற்கு முன்னர் 05:40 மணிக்கு இரையடி சேர்ந்தார்கள்.அதே நாளில் இஷா தொழுகையிற்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டார்கள்.

Source: The Life of Maulana Muhammad Yahya, Page 308

Tablighi Jamaat History
ஜன்னத்துல் பகீ

1983 நவம்பர் 4 –பாகிஸ்தானில் ரைவிந்த் இஜ்திமா நடைபெற்றது, அதில் அனைத்து மூத்த பெரியார்களும் கலந்து கொண்டனர். இஜ்திமாவிற்கு ஒரு வாரத்திற்கு பிறகு நவம்பர் 12 அன்று நடைபெற்ற உலக மஷூராவில், மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் தப்லீக் ஜமாத்திற்கு ஷூரா முறையை கொண்டுவரும் கருத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்கள்.

Source: Ahwal wa Atsar, Page 311, Page 450

அதற்குப் பிறகு, மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், மேலும் உலகின் பல பகுதிகளிலும் ஷூராக்களை அமைத்தார்கள்.

Source: Letter written by Maulana Shahid Saharanpuri to Maulana Saleemullah Khan

1993 மே 20 –மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர்கள் மக்காவில் இருக்கும் போது மயங்கி விழுந்தார்கள். 1990 முதல் இது ஏழாவது முறையாக அவர்கள் இவ்வாறு மயக்கத்திற் குள்ளானார்கள்.

Source: Sawanih Hadhratji Tsalits, III/440

1993 மே – ஹஜ்ஜுடைய காலத்தில், மக்காவில், மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள், மௌலவி ஜய்னுல் ஆப்தீன், மௌலானா ச’ஈத் அஹ்மத் ஃகான், ஹாஜி அஃப்தால், ஹாஜி அப்துல் முகீத், ஹாஜி அப்துல் வஹாப் (ரஹ்மதுல்லாஹி அலைஹிம் அஜ்ம’ஈன்) மற்றும் பல பெரியார்களிடம் உரையாற்றினார்கள்: “எனது உடல்நிலை நோயின் காரணமாக மோசமாகி வருகிறது, முந்தைய துடிப்பு என்னிடம் இப்போது இல்லை. ஏற்கனவே இந்தப் பணி முழு உலகிலும் பரவி விட்டது, தற்போது இது எனக்கு கடினமாகி வருகிறது. அதனால் தஃவா பணிக்காக ஒரு ஷூரா அமைக்க விரும்புகிறேன், இது இந்தப் பணிக்கு உதவும்.”

Source: Dakwah wa Tabligh Azhim Mehnat ke Maujudah Halat, Page 15,16.

1993 ஜூன் 14 – நிஜாமுத்தீன் மர்கஸில், மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்களின் அறையில் அனைத்து பெரியார்களும் ஒன்று கூடினர். அவர்கள்: மௌலானா ச’ஈத் அஹ்மத் ஃகான் சஹாப், முஃப்தி ஜய்னுல் ஆப்தீன் , ஹாஜி அஃப்தால், ஹாஜி அப்துல் முகீத், ஹாஜி அப்துல் வஹாப், மௌலானா இஸ்ஹாருல் ஹஸன், மௌலானா உமர் பாலன்பூரி மற்றும் மௌலானா ஜுபைர் (ரஹ்மதுல்லாஹி அலைஹிம்).

அங்கு கூடியிருந்தவர்களிடம் மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது; “என் உடல்நிலை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.எனது நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது, ஆனால் இந்தப் பணி வளர்ந்து கொண்டே செல்கிறது. இதனை இப்போது நான் தனியாகச் செய்ய முடியாது. நாம் அனைவரும் சேர்ந்து இதற்காகச் செயல்பட வேண்டும்”. பின்னர் கூறினார்கள், “இன்றிலிருந்து நீங்கள் எனது ஷூரா. மேலும் ‘மியான்ஜி மெஹ்ராப் மற்றும் மௌலானா ஸஃத்’ ஆகிய இருவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் உதவியுடன், இந்த பத்து பேரினால் இந்தப் பணி சிறப்பாக நடைபெறும்” என்றார்கள்.

பின்னர், ஷூரா இவ்வாறு அமைக்கப்பட்டது:
(1) மௌலானா ச’ஈத் அஹ்மத் ஃகான்,
(2) முஃப்தி ஜய்னுல் ஆப்தீன்,
(3) ஹாஜி அஃப்தால்,
(4) ஹாஜி அப்துல் முகீத், (5) ஹாஜி அப்துல் வஹாப்,
(6) மௌலானா இஸ்ஹாருல் ஹஸன்,
(7) மௌலானா உமர் பாலன்பூரி,
(8) மௌலானா ஜுபைர், (9) மியான்ஜி மெஹ்ராப் மேவாதி, மற்றும்
(10) மௌலானா ஸஃத்.

Source: Dakwah wa Tabligh Azhim Mehnat ke Maujudah Halat, Page 16

1993 ஜூன் – ஃபைசலின் மாற்றம்.

ஷூரா அமைக்கப்பட்டபின், மௌலானா ச’ஈத் அஹ்மத் ஃகான், ஷூரா உறுப்பினர்கள் அனைவரின் முன்னிலையில் மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்)அவர்களிடம், “நீங்கள் இங்கு இருக்கும்போது, நீங்கள் எங்கள் அமீராக இருந்து எங்களை வழிநடத்துகிறீர்கள், ஆனால் நீங்கள் இல்லாதபோது, எங்களால் எப்படி தீர்மானங்களை எடுக்க முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்), “உங்களிலிருந்து மாறி மாறி ஒருவரை ஃபைஸலாக தேர்வு செய்து செயல்படலாம்” என்று பதிலளித்தார்கள்.

Source: Dakwah wa Tabligh Azhim Mehnat ke Maujudah Halat, Page 12

மௌலானா ஸஃத், அல்லாஹ்வின் பாதையில் நேரம் செலவழிக்காதவராக இருந்தபோதிலும் அவரை ஏன் சேர்த்தனர்?

மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்), மௌலானா ஸஃத் அவர்களை ஷூராவில் ஆர்வத்துடன் சேர்த்தார்கள், அதைக் கொன்டு மேவாத் மக்களிடமிருந்து பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க விரும்பினார்கள். மௌலானா யூஸுஃப் (ரஹ்)அவர்களின் மறைவிற்கு பின் ஏற்பட்ட பிரச்சினை போன்று மீண்டும் உண்டாகும் என்ற அச்சமும் இருந்தது. அந்த நேரத்தில், மௌலானா ஸஃத் 26 வயதுடையவராக இருந்தார், அதே நேரத்தில் அல்லாஹ்வின் பாதையில் அவர் எவ்விதமான சேவையும் ஆற்றவில்லை, ஆனால் அவர் உலகளாவிய ஷூராவுக்கு நியமிக்கப்பட்டார்.

இன்ரறுவரை மௌலானா ஸஃத், ஜமா’த்தில் நேரம் செலவழித்ததேயில்லை.

Source 1: C Amaantullah’s Detail Explanation.

Source 2: Haji Abdul Wahab Sahab, Raiwind Ijtema 2017 (Maulana Saad has not spent even 40 days in the Path of Allah)

மௌலானா இனாமுல்ஹஸன் (ரஹ்), வேலையின் அடுத்த அமீராக நியமிக்கப்படுவதற்கு தன் மகன் தகுதியானவர் என்ற போதிலும், மௌலானா ஜுபைரை (ரஹ்) அவர்களை அடுத்த அமீராக நியமிக்க ஒரு போதும் எண்ணியதில்லை. . இந்த உழைப்பு வம்சாவளி, குலம் அல்லது உறவுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை என்பதை தெரியப்படுத்த விரும்பினார்கள். மௌலானா ஜுபைர், அல்லாஹ்வின் பாதையில் ஒரு வருடம் செலவிட்டவராக இருந்தார். தந்தையுடன் பல பயணங்களில் பங்கேற்றவர், மேலும் மௌலானா ஜகரிய்யா (ரஹ்) அவர்களின் மாணவராகவும் இருந்தார்கள், அதே சமயம் இருவரிடமிருந்தும் பைஅத் வழங்க இஜாஸத் பெற்றிருந்தார்கள். இந்த அனைத்து தகுதிகளும் இருந்தபோதிலும், மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவரை அமீராக நியமிக்காமல், ஒரு ஷூராவை அமைத்தார்கள்.

மௌலானா இப்ராஹிம் தேவ்லா (தா.ப) நிஜாமுத்தீன் மர்கஸில் எப்போதும் இருக்க முடியாததால், அவரை ஷூரா குழுவில் நியமிக்கவில்லை.அவர்களது பெரும்பாலான நேரத்தை நீண்ட கால குரூஜில் (அல்லாஹ்வின் பாதையில்) செலவிட்டு வந்தார்கள்.

1994 மார்ச் 31 – மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) ஹைதராபாத்தில் நடந்த இஜ்திமாவில் பை’அத் அளிக்கும்போது, உடல் நலக்குறைவினால் மயங்கி விழுந்தார்கள்.

Source: Ahwal wa Atsar, Page 148

1994 ஜூன் 22 முதல் ஜூலை 2 – மௌலானா இனாமுல் ஹசன் (ரஹ்) இங்கிலாந்திற்குச் சென்று டிவ்ஸ்பரியில் நடைபெற்ற இஜ்துமாவில் பங்கேற்றார்கள். ஹஜ் மற்றும் உம்ரா தவிர இது மௌலானா இனாமுல் ஹசன் (ரஹ்) அவர்களின் கடைசி வெளிநாட்டுப் பயணமாகும். அந்த இஜ்துமாவில் சுமார் 80,000 பேர் பங்கேற்றனர்.

Source: Sawanih Hadhratji Tsalits, III/139

1995 மார்ச் 29 – மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் அனைத்து ஷூரா உறுப்பினர்களுடனும் ஹஜ் செய்தார்கள். மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) தனது வாழ்நாளில் 17 முறை ஹஜ் செய்திருக்கிறார்கள், அதில் கடைசியாக செய்த ஹஜ் இதுவாகும்.இந்த ஹஜ்ஜின் போது, ஒரு மஷூரா நடைபெற்றது. அதில், மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) மற்றும் அனைத்து ஷூரா உறுப்பினர்களும் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா வரை ஒரு நீண்ட ஸஃபர் செய்ய முடிவு செய்யப்பட்டது.

Source: Ahwal wa Atsar, Page 183

1995 ஜூன் 6 – இந்தியாவின் , உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முஸஃபர்நகரில் , நடைபெற்ற இஜ்துமாவில் மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் இறுதியாக பங்கேற்றார்கள். தனது கடைசி பயானில் அல்லாஹ்வை புகழ்ந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் மீது ஸலவாத் கூறிய பின்: “அல்லாஹ் ஒருவரின் குடும்பத்தையும், வம்சாவளியையும் பார்ப்பதில்லை. அல்லாஹ் ஸுப்ஹானஹுவத் தஆலா ஒருவரின் செயல்களை மட்டுமே பார்ப்பான். ஒருவரிடம் நல்ல செயல்கள் இருக்குமானால், அவர் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருப்பார். ஆனால், ஒருவரிடம் தவறான செயல்கள் இருக்குமானால், அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் இருந்து தொலைதூரமானவராக இருப்பார்.”

Source: Sawanih Hadhratii Tsalits, III/365

தப்லீக் ஜமாஅத்: ஆலமி ஷூராவுடைய காலம்.

1995 ஜூன் 10 – அன்று இரவு 1.20 மணியளவில் ஹத்ரத்ஜீ மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் 77 வயதில் வஃபாத்தானார்கள். அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவன்னம் அவர்களுடைய ரூஹ் பிரிந்தது. அவர்களது ஜனாஸா தொழுகையில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து அரை மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர், பின்னர் அவர்களின் ஜனாசா மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்களின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Source: Sawanih Hadhratji Tsalits, III/368, 369

1995 ஜூன் 10 முதல் 12 – இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த அனைத்து ஷூரா உறுப்பினர்களும் நிஜாமுத்தீன் மர்கஸில் 3 நாட்களாக நடைபெற்ற மஷூராவில் கலந்து கொண்டனர். அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு:

  • இனிமேல், இந்த பணியின் பொறுப்பு தனிநபர் ஒருவரின் மீது இருக்காது; மாறாக, உலக ஷூராவுடைய குழுவின் பொறுப்பில் இருக்கும்.

  • உலக ஷூரா உறுப்பினர்கள் நிஜாமுத்தீனில் வசித்தால், அவர்கள் நிஜாமுத்தீன் ஷூராவின் உறுப்பினர்களாக இருந்து, அங்குள்ள பணிகளை நிர்வகிப்பார்கள்..

  • நிஜாமுத்தீனில் பை’அத் செய்வது நிறுத்தப்படும்.

 Source 1: Tablighi Markaz Nizamuddin Kuch Haqaiq, Page 3

Source 2: Ahwal wa Atsar, Page 421

Source 3: : Dr Khalid Siddiqui’s Letter

Source 4:Maulana Yaqub’s letter

Source 5: Haji Abdul Wahab’s statement /letters

அப்போது 72 வயதாக இருந்த ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் அன்று மஷூராவில் நடந்த நிகழ்வுகளை தெளிவாக நினைவு கூர்ந்தார்கள்:

மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்களின் மறைவிற்கு பிறகு நாங்கள் ஒரு மஷூராவில் அமர்ந்திருந்தோம். மௌலானா ஸஃத் தனது கருத்தை முன்வைத்தார் “என்னை அமீராக நியமிக்கப்பட்டால் மௌலானா ஜுபைரை (ரஹ்) ஆதரிப்பவர்கள் இவ்வுழைப்பிலிருந்து விலகிக் கொள்வார்கள், மௌலானா ஜுபைர் (ரஹ்) அமீராக நியமிக்கப்பட்டால் என்னை ஆதரிப்பவர்கள் இந்த உழைப்பில் இருந்து விலகி விடுவார்கள். அதனால் இந்த பணி மஷூராவின் அடிப்படையில் நடாத்தப்பட்ட வேண்டும், அத்துடன் அங்கு பை’அத் செய்தல் நடைபெற மாட்டாது.” இக் கருத்து அங்கு இருந்தவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

Source:  Haji Abdul Wahab Sahab (Audio), Raiwind November 2016

1995 ஜூன் – மௌலானா ஜுபைர் (ரஹ்) அவர்களின் பல்வேறு தகுதிகளை கருத்தில் கொண்டு, அவர்களை அடுத்த அமீராக நியமிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவர்கள் அதிருப்தியடைந்தனர். இருந்தாலும், அமீராக நியமிக்கப்படாததை மௌலானா ஜுபைர்(ரஹ்) அவர்கள் எந்த விதமான விரக்தியோ அல்லது கோபமோ இன்றி, மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். மௌலானா ஜுபைர் (ரஹ்) தனது சம்மதத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியதைப் பார்த்த பிறகு, இந்த விவாதம் இறுதியில் அடங்கியது.

Source: Tablighi Markaz Nizamuddin Kuch Haqaiq, Page 3

அந்த நேரத்தில் மௌலானா ஸஃத் அவர்கள் 30 வயதுடையவர்களாக இருந்தார்கள். மேவாத் மக்களை தவிர தப்லீகில் பிரபலமற்றவராக இருந்தார். இன்னும், அதுவரை ஒரு ஷைஃகிடம் இஸ்லாஹி த’ஃஅல்லுக் வைத்திருக்கவுமில்லை, இஜ்துமாக்களில் கலந்து கொள்வதைத்தவிர அல்லாஹ்வின் பாதையில் சென்றதுமில்லை. ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் மற்றும் சௌத்ரி அமானதுல்லாஹ் சாஹிப் ஆகியோரின் சான்றுப்படி இது வரை அல்லாஹ்வின் பாதையில் 40 நாட்களாயினும் கழித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Tablighi Markaz Nizamuddin Kuch Haqaiq, Page 3

1995 –மௌலானா இனாமுல்ஹஸன் (ரஹ்) அவர்களது மறைவிற்குப் பின் மௌலானா ஸஃத் இவ்வாறு சொல்லக் கூடியவராக இருந்தார்

தஃவத் தப்லீகுடைய விரோதிகள் இருவர்: ஷைஃகுல் ஹதீஸ் மௌலானா ஜகரிய்யா, ஏனெனில் இவர்கள் என் தந்தையை அமீராக நியமிக்கவில்லை, இரண்டாவது எதிரி மௌலானா இனாமுல் ஹஸன்!”

மௌலானா ச'அத், 1995


இவ்வாறான வார்த்தைகள் பலரை கோபப் படுத்தியது.

Source: Ahwal Wa Atsar, Page 425

1996 –நிஜாமுத்தீன், காஷிஃபுல் உலூம் மத்ரஸாவினுடைய ஷைஃகுல் ஹதீஸாக மௌலானா ஜுபைர் (ரஹ்) நியமிக்கப் பட்டார்கள்.நிஜாமுத்தீனில் தன்னுடைய தந்தையிடமும் மௌலானா ஜக்கரிய்யா (ரஹ்)யிடமும் இஜாஸத் பெற்றிருந்த ஒரே நபர் மௌலானா ஜுபைர் (ரஹ்) அவர்கள் தான். இருப்பினும் அவர்களது மௌத் வரை எவரையும் பை’அத் செய்துகொன்டதில்லை , 1995னுடைய மஷூராவை/ ஒப்பந்தத்தை மதித்து மரியாதையுடன் பின்பற்றினார்கள்.

Source: Ahwal wa Atsar, Page 106, Page 421

1996 -ஆம் ஆண்டு,ஷூரா ஜமாஅத் பெரியார்கள், இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா வரை சஃபர் செய்தார்கள். மௌலானா இனாமுல் ஹசன் (ரஹ்) மரணத்திற்கு முன் இந்நாடுகளிற்கு சஃபர் செய்வதற்காக எடுத்த தீர்மானத்தை மதிப்பழிப்பதற்காகவே இந்த சஃபர் நடைபெற்றது. இந்த சஃபரின் போது ஷூரா ஜமாஅத்தின் பெரியார்கள் பல மஷூராக்களை நடத்தினார்கள்.

Source: Ahwal wa Atsar, Page 183

1996 ஆகஸ்ட் – மௌலானா இஸ்ஹாருல் ஹசன் சாஹிப் (ரஹ்) அவர்கள் வஃபாத்தானார்கள். இவர்கள் நிஜாமுத்தீன் மர்கஸ், ஷூராவின் மூத்த பெரியாராக இருந்தார்கள். மேலும், அன்னார் மஸ்ஜிதின் இமாமாகவும், காஷிஃபுல் உலூம் மத்ரசாவின் தலைமையாசிரியராகவும், ஷைஃகுல் ஹதீஸ் மற்றும் நிஜாமுத்தீன் மர்கஸின் மேலாளராகவும் இருந்து வந்தார்கள். அவர்களுடைய வஃபாத்திற்குப் பிறகு, மௌலானா ஸஃத் மர்கஸின் சேமிப்புகளையும் பொருளாதார கணக்குகளையும் தன் கையில் எடுத்துக் கொண்டார். இன்றுவரை நிஜாமுத்தீன் மர்கஸின் பொருளாதாரத்தின் முழு கணக்குகளை அறிந்தவர் மௌலானா ச’அத் மட்டுமே, அவரைத் தவிர வேறு எவருக்கும் பகிரங்கப் படுத்தப்பட்டதில்லை.

Source: Tablighi Markaz Nizamuddin Kuch Haqaiq, Page 4

1997 மே – மௌலானா உமர் பாலன்பூரி (ரஹ்) வஃபாத்தானார்கள். இவர்களை பெரும்பாலும் ‘தப்லீக் இன் குரல்’ அல்லது ‘தப்லீக் இன் முதகல்லிம்’ (பேச்சாளர்) என மக்கள் அழைப்பார்கள்.

Source: Tabligh Markaz Nizamuddin Kuch Haqaiq, Page 5

1997 ஆகஸ்ட் – மியான்ஜி மெஹ்ராப் சாஹிப் (ரஹ்) அவர்கள் வஃபாத்தானார்கள்.

Source: Tabligh Markaz Nizamuddin Kuch Haqaiq, Page 5

1998 –அனைத்து ஷூரா ஜமாஅத் பெரியார்களும் கென்யா, மாலவி, சாம்பியா, மொசாம்பிக், ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, ரீயூனியன், மடகாஸ்கர் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு சஃபர் சென்றனர். பயணத்தின் போது எப்போதும் அவர்களிடையே மாறி மாறி ஃபைஸலாக ஒருவரை அமீர் ஆக முடிவு செய்து மஷூரா நடத்தப்பட்டது.

Source:  Ahwal wa Atsar, Page 190

1999 அக்டோபர் 18 – உலக ஷூரா உறுப்பினராக இருந்த ஹாஜி அப்துல் முகீத் சாஹிப் பங்களாதேஷில் வஃபாத்தானார்கள். அன்னார் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் காலத்திலும் வாழ்ந்தவர்.

Maujudah Ahwal kiWadhahat se Muta’alliq, Page 13

1999 நவம்பர் 15 – உலக ஷூரா உறுப்பினராக இருந்த மௌலானா ச’ஈத் அஹ்மத் ஃகான் சாஹிப் (ரஹ்) மதீனா அல்முனவ்வராவில் வஃபாத்தானார்கள். இவர்களின் ஜனாஸா ஜன்னதுல் பகீயில் அடக்கம் செய்யப்பட்டது.

Source: Ahwal wa Atsar, Page 319

1999 -ல் 10 ஷூரா உறுப்பினர்களில் 5 பேர் மறைந்துவிட்டார்கள், மேலும் மீதமுள்ள 5 பேர்: முஃப்தி ஜைனுல் ஆப்தீன் (பாகிஸ்தான், பைசலாபாத்), ஹாஜி அப்தால், ஹாஜி அப்துல் வஹாப், மௌலானா ச’அத், மற்றும் மௌலானா ஜுபைர்.

1999 டிசம்பர் 31 – மௌலானா சையித் அபுல் ஹசன் அலி நத்வி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் வஃபாதானார்கள். மௌலானா இல்யாஸ் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களோடு மௌலானா நத்வி அவர்களுக்கு நெருங்கிய தொடர்பும் இருந்தது.

Source: Ahwal wa Atsar, Page 409

2000 –ம் ஆண்டு, 5 மீதமுள்ள ஷூரா ஜமாஅத் பெரியார்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஒரு சஃபர் செய்தார்கள். பின்னர் இரண்டு ஷூரா உறுப்பினர்கள் வஃபாத் ஆனார்கள்: முஃப்தி ஜைனுல் ஆப்தீன் (ரஹ்) மற்றும் பாய் அஃப்தல் சாஹிப் (ரஹ்). பின்னர் 3 ஷூரா உறுப்பினர்கள் மீதமிருந்தனர், அவர்கள் ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப், மௌலானா சஅத் சாஹிப், மற்றும் மௌலானா ஜுபைருல் ஹஸன் சாஹிப். இந்த மூவரில் ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் அவர்கள் மட்டுமே வயதில் மூத்தவராகவும், மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் சகவாசத்திலும் இருந்தவர்.

Source: Ahwal wa Atsar, Page 321

2000 முதல் 2014 வரை – முஃப்தி ஜைனுல் ஆப்தீன் (ரஹ்) மற்றும் ஹாஜி அஃப்தல் (ரஹ்) ஆகியோர் வஃபாத் ஆன பிறகு, பல்வேறு தரப்புகளிலிருந்து ஷூரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதாக ஆலோசனைகள் வந்தன. இவ்வாறான ஆலோசனைகள் வெவ்வேறு பிரச்சனைகளின் காரணமாக தாமதமாகிக் கொண்டே சென்றது.

Source: Maulana Ahmad Mewati, khadim of Maulana Zubayr (rah)

2001 நவம்பர் 2 – மௌலானா ச’அத் சாஹிபுடைய உரையின் மீது வரும் முதல் விமர்சனம் மௌலானா முஹம்மத் இஷாக் உத்தர்வி அவர்களின் கடிதம் மூலம் வெளியாகியது. இந்த கடிதம் மௌலானா ச’அத், மௌலானா ஜுபைருல் ஹசன் மற்றும் மௌலானா இஃப்திகாருல் ஹசன் அவர்களுக்கு எழுதப்பட்டது. இந்த கடிதத்தில் 2001ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதியிலான மௌலானா ச’அதின் உரையைப் பற்றிய கவனத்தை எழுப்பியது. அந்த பயானில், மௌலானா ச’அத் ஈமான் பற்றிய தவறான புரிதலை விளக்கியதாகவும், “அல்லாஹ் இதனைச் சொன்னான்…” என்று தவறாகச் சொல்லி, அல்லாஹ் சுப்ஹானஹுவ தஆலா எப்போதும் கூறாத ஒன்றை கூறியதாகவும் இருந்தது. ந’ஊதுபில்லாஹ்

Source 1: Maulana Saad se Ulama Umat ke Ikhtilaf ki Bunyadi Wujuhat, Page 7- 8

Source 2: Moulana Saad – Wifaaqul Ulema Al Hind, Page 6-7

2002 – மௌலானா ச’அ’த் அவர்கள் “முந்தஃகாப் அஹாதீஸ்” என்ற புத்தகத்தை பகிர்வதை தொடங்கினார்.

Source: Ahwal wa Atsar, Page 359

2004 மே 15 – உலக ஷூரா உறுப்பினர்களில் ஒருவரான முஃப்தி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பாகிஸ்தானின் ஃபைசலாபாத் நகரில், 87 வயதில் வஃபாத் ஆனார்கள்.

Source: Tadzkirah Maulana Zubayr, Page 127

2005 ஏப்ரல் 11 – உலக ஷூரா உறுப்பினர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி அஃப்தல் அவர்கள் வஃபாத் ஆனார்கள்.

Source: Dakwah was Tabligh Azhim Mehnat ke Maujudah Halat, Page 18

2005 – தாருல் உலூம் தேவ்பந்திற்கு ஃகான்பூரில் உள்ள முக்கியமான ஆலிம் ஒருவர் மௌலானா சஅத் அவர்களின் பயானை விமர்சித்து ஒரு புகார் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்,மௌலானா ச’அத் உழைப்பில் ஒரு தனித்த குழுவை உருவாக்குகிரார் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த புகார் தேவ்பந்தின் உலமாக்களை அதிர்ச்சியடையச் செய்தது.

Source: Darul Ulum Deoband ke Mauqif, Page 17

2006 செப்டம்பர் 12 –மௌலானா சஅத் முதல் முறையாக நிஜாமுத்தீன் மர்கஸில் பகிரங்கக் கூட்டத்தில் “முந்தஃகாப் அஹாதீத்” நூலை இஜ்திமா’ஈ அமல்களில் வாசிக்கத் துவங்குமாறு அறிவுறுத்தினார். இது மிகுந்த எச்சரிக்கையுடன் கூடியதாக இருந்தது, மேலும் நிசாமுத்தீன் பகுதியில் உள்ள பெரும்பாலான மூத்த பெரியோர்கள் இதற்கான கவலைகளை வெளிப்படுத்தினர். தப்லீகுடைய உழைப்பில் மஷூரா இன்றி இவ்வளவு பெரிய மாற்றம் செயல்படுத்தப்பட்டது. மௌலானா சஅத் அனைத்து பெரியார்களின் கவலைகளையும் புறக்கணித்து, மக்களிடத்தில் முந்தஃகாப் அஹாதீதை இஜ்திமா’ஈ தாலீம் அமல்களில் தொடர்ந்து வாசிக்குமாறு வலியுறுத்தினார்.

Source: Ahwal wa Atsar, Page 460

2010 ஜனவரி பங்கேற்பாளர்களின் அதிக எண்ணிக்கையினால், முதல் முறையாக டொங்கி/பிஷ்வா இஜ்திமா , இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

Source: Banglapedia – Viswa Ijtema

2014 மார்ச் 18 –ஷேஃகுல் ஹதீஸ் மௌலானா முஹம்மத் ஜுபைர் (ரஹ்) நிஜாமுத்தீன், பங்களாவாலி பள்ளிவாசலில், டெல்லி – ராம் மனோகர் லோஹியா (RML) மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது 63 வயதில் வஃபாத் ஆனார்கள். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன், அவர்கள் கூறியது: “எனக்கு இஹ்ராம் ஆடை கொண்டு வாருங்கள், நான் உம்ரா செய்ய விரும்புகிறேன்.” அவர்களின் குடும்பத்தினர், “இல்லை, நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்” என்றனர். ஆனால், அவர்கள், “இல்லை, நான் உம்ரா செய்ய விரும்புகிறேன். எனக்கு இஹ்ராம் ஆடை கொண்டு வாருங்கள்” என்று மீண்டும் வலியுறுத்தினார்கள்.

மௌலானா ஜுபைர் (ரஹ்) உம்ரா செய்யும் நிய்யத்துடன் மருத்துவமனைக்கு சென்றார்கள். நிஜாமுத்தீனில் இருந்து புறப்பட்டபோது, அன்னார் “அஸ்ஸலாமு அலைக்கும். விடைபெறுகிறேன், நிஜாமுத்தீன்” என்று கூறினார்கள்.

மௌலானா ஜுபைர் (ரஹ்) அவர்களுடைய வாழ்நாளில் தொடர்ந்த ஒரு துஆ : “யா அல்லாஹ், நிஜாமுத்தீனில் ஃபித்னா வருவதற்கு முன் என்னுடைய உயிரை எடு.”

அவர்களுடைய ஜனாஸா தொழுகையை அவர்களது மாமா, மௌலானா இஃப்திகாருல் ஹஸன் காந்தலவி அவர்கள் நடத்தினர், அதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

Source: Jejak Dakwah Melawan Fitnah, Page 75

மௌலானா ஜுபைருல் ஹஸன் (ரஹ்) அவர்களின் வஃபாத்திற்கு பிறகு

அஸ்ஸலாமு அலைக்கும், கீழே உள்ளவற்றை வாசிப்பதற்கு முன், அது எவ்வளவு கசப்பாக இருந்தாலும், தப்லீக் ஜமாஅத்தின் உண்மையான வரலாற்றைப் பாதுகாப்பது தான் எமது நோக்கமாக இருப்பதை புரிந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் காலம் கடந்து, தலைமுறைகள் மாறும் போது, இந்த வரலாறு மறக்கப்பட்டு போய் விடலாம். நாங்கள் மக்களிடத்தில் வெறுப்பை உண்டாக்க விரும்பவில்லை, மேலும் நிச்சயமாக புரம் பேசுதலும் அல்ல. எங்கள் கட்டுரை ‘புரம் பேசுதலின் எச்சரிக்கை’யை பாருங்கள். ஒரு முஸ்லிம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அவர் இன்னும் நம் முஸ்லிம் சகோதரரே. நாங்கள் நேசிப்பதும், வெறுப்பதும் அல்லாஹ்விற்காகவே.

2014 நவம்பர் – மௌலானா ஜுபைருல் ஹஸன் (ரஹ்) அவர்களின் வஃபாத்திற்கு பிறகு தப்லீக் ஜமாஅத்தில் பிளவு ஏற்பட்டது. உலக மஷ்வராவில் ஹாஜி அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் மேற்கொண்ட முடிவின்படி, மௌலானா ஜுபைர் (ரஹ்) வழக்கமாக செய்யும் துஆ, முஸாஃபஹா (அல்லாஹ்வின் பாதையில் புறப்படும் முன் செய்யப்படும் கைபிடிப்பு) தந்தையின் மரபை கௌரவிக்கும் வகையில், அவர்களது மகன் மௌலானா ஜுஹைருல் ஹஸன் சாஹிப் மூலம் மாற்றப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவு மௌலானா ச’அத் அவர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.

ராய்விந்த் இஜ்திமாவில், பெரியார்களின் முன்னிலையில், மௌலானா ஸஃத் மீண்டும் முஸாஃபஹா குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர், முஸாஃபஹாவை யாருடனும் பகிர விரும்பவில்லை. மேலும் விவரங்களுக்கு: “மௌலானா ஸஃத் முஸாஃபஹாவை தீவிரமாக கோருகிறார்” என்ற கட்டுரையைப் படிக்கவும்.

Source: Ahwal wa Atsar, Page 76

மேலும் விரிவான விவரங்களுக்கு: தப்லீக் ஜமாஅத்தின் பிளவு ஏன் ஏற்பட்டது

2014 டிசம்பர் –போபால் இஜ்திமாவின் போது, மக்கள் முஸாஃபஹாவிற்காக மௌலானா ஜுஹைரிடம் மேடையில் அமருமாறு வேண்டிய போது, மௌலானா ச’அத் மிகுந்த கோபத்தில் மேடையை விட்டு வெளியேறினார்.

Source: Tablighi Markaz Nizamuddin Kuch Haqaiq

2014 – ஆம் ஆண்டு மௌலானா ச’அத் நிஸாமுத்தீன் மர்கஸில் தன்னையே முன்னிறுத்தி பை’அத் செய்வதன் மூலம் துரோகமான ஒரு நடவடிக்கையை துவங்கினார். இது 1995ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும். இன்னும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அவர் பை’அத் செய்வதற்கு மௌலானா இல்யாஸ் (ரஹ்)அவர்களின் பெயரை பயன்படுத்திய போதும் அவர்களை ஒருபோதும் இவர் சந்தித்ததுமில்லை, அல்லது அவர்களிடமிருந்து இஜாஸத் (அனுமதி) பெற்றதுமில்லை.

Source: Maujudah Ahwal ki Wadhahat se Muta’alliq, Page 21

2014 –ஆம் ஆண்டு, மௌலானா ஸஃத் பல பயான்களில் உலமாக்களை விமர்சித்துக் கொண்டிருந்தார்.தாருல் உலூம் தேவ்பந்திற்கு, மௌலானா ச’அத் அவர்களால் இஜ்துமாக்களில் நிகழ்த்தப்பட்ட பயான்களையும், பொதுப் பேச்சுகளையும் கடுமையாக விமர்சித்து ஏராளமான கடிதங்கள் வந்தன. அவரது பயான்களின் உள்ளடக்கங்கள் உலமாக்களின் இஜ்மாஃவிற்கு மாற்றமாகவும், இஸ்லாத்தில் எல்லை மீறல்களும் (குளூவ்) நிறைந்திருந்தன.

இதனைத் தொடர்ந்து, தாருல் உலூம் தேவ்பந்த் இந்த விவகாரத்தில் சில ஆண்டுகள் விசாரணை நடத்தியது. முதலில், மௌலானா ச’அத் அவர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சான்றுகள் மற்றும் சாட்சிகளை சேகரித்தனர். பின்னர், அவரது மரியாதையையும் தஃவா பணியின் நல்ல பெயரையும் பாதுகாக்கும் வகையில், மௌலானா ஸஃத் அவர்களுக்கு கடிதம் அனுப்பி, அறிவுறுத்தினர். எனினும், நீண்ட காலம் காத்திருந்தபோதும், மௌலானா ஸஃத் அவர்களிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.

Source: Mawqif Darul Ulum Deoband, Page 5, 20

2014 முதல் 2015 வரை – நிஜாமுத்தீன் தலைமையகத்தின் அனைத்து மூத்த பெரியார்களும் மௌலானா ச’அத்திற்கு பொதுமக்கள் முன்னிலையில் பயான் நிகழ்த்தும் பொழுது கவனமாக இருக்கவேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். தப்லீகின் ஒரு கோட்பாடு என்னவென்றால், பயான்களில் தற்கால பிரச்சினைகள் அல்லது ஃபிக்ஹு சட்டங்கள் குறித்து உரையாற்றக் கூடாது என்பதே. மேலும், நான்கு விஷயங்களை தவிர்க்க வேண்டும், அவை: தகாபுல் (تَقَابُل) – *ஒப்பீடு செய்வது*, தன்கீஸ் (تَنْقِيص) – *அடுத்தவரை தாழ்த்திப் பேசுதல்*, தன்கீத் (تَنْقِيد) – *விமர்சனம் செய்வது*, மற்றும் தர்தீத் (تَرْدِيد) – *மறுப்பு தெரிவிப்பது* என்பவைகளாகும்.

82 வயதான மௌலானா இப்ராஹிம் தேவ்லா (தா. ப), மௌலானா சஅ’த் அவர்களின் ஆசிரியராக இருந்தபோது பயான்கள் நிகழ்த்துவதற்கு முன் எப்போதும் மஷூரா செய்துவிட்டு நிகழ்த்துமாறு அழைப்பு விடுத்தார்கள் . துரதிர்ஷ்டவசமாக மௌலானா ச’அத் இந்த அழைப்பை ஒருபோதும் மதித்ததில்லை.

மௌலானா ச”அதுக்கு அவரை நோக்கி வரும் விமர்சனங்கள் அனைத்தும் மிகவும் அசௌகரியமாக இருந்தது. அதனால், தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ‘இரண்டு மாத தர்தீப்’ (அமைப்பை) அமைத்தார். அறிமுகமற்ற பல இளைஞர்கள் மேவாத்தில் இருந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ்வின் பாதையில் ஒருநாளேனும் செலவிட்டதில்லை. அவர்களின் நடத்தை கயவர்களை போன்று நாகரிகமற்றவையாக இருந்தது, இவர்களின் எண்ணிக்கை சுமார் நூறுக்கும் மேற்பட்டதாக இருந்தது. மௌலானா ச’அதுடைய பாதுகாப்பை மட்டுமல்லாது, அவருடன் இணங்காதவர்களை கண்காணிப்பதும் இவர்களின் வேலையாக இருந்தது.

Source: Tablighi Markaz Nizamuddin Kuch Haqaiq, Page 13

2015 ஆகஸ்ட் 18 –நிஜாமுத்தீன் மர்கசில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் பழைய கார்கூன் ஜோட் முடிந்த பிறகு, மௌலானா ச’அதுடைய பாதுகாவலர்கள் கலவரம் ஏற்படுத்தினர். அவர்கள் மௌலானா ஜுஹைருல் ஹசன் சாஹிப் அவர்களை சந்தித்து முசாஃபஹா செய்ய விரும்பியவர்களை தடை செய்து, வெளியேற்றினர்.

Further details: Maulana Saad aggressively demands Musafaha)

Source: Tablighi Markaz Nizamuddin Kuch Haqaiq, Page 10

2015 ஆகஸ்ட் 20 –அன்று நிஜாமுத்தீன் மர்கஸில் ‘ஷப்குஸாரி‘ இரவின்போது, டில்லியின் பொறுப்புதாரிகள் தூண்டிவிடப்பட்டனர். அப்போது நிஜாமுத்தீன் மர்கஸில் டில்லி சாத்திகளுக்கும் மௌலானா ச’அத் அவர்களுடைய பாதுகாவலர்களுக்கும் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. மௌலானா ச’அத் அவர்களின் பாதுகாவலர்கள் மிகுந்த சந்தேகம் கொண்டவர்களாக மாறியிருந்தனர். மௌலானா ச’அத் அவர்களை அவமதித்ததாகச் சிறிய ஆதாரம் கிடைத்தாலும், அந்த நபரை அவர்கள் தாக்கிவிடுவார்கள்.

Source: தப்லீக்ங் மார்கஸின் நிஸாமுத்தீன் தொடர்பான சில உண்மைகள், பக்கம் 10

2015 ஆகஸ்ட் 23 – நிலைமை மேலும் மேலும் குழப்பமானதாக மாறியபோது, மூத்த பெரியவர்களின் ஒரு குழு (மௌலானா இப்ராஹீம் சாஹிப் (தா.ப) மற்றும் பேராசிரியர் சனா’உல்லா (ரஹ்)உட்பட) மௌலானா ச’அத் நடத்தி கொண்டிருந்த மர்கஸ் மஷூராவில், தங்களின் கவலைகளை வெளிப்படுத்தச் சென்றார்கள். அவர்கள் நிஜாமுத்தீன் மர்கஸை கட்டுப்படுத்தி வந்த கும்பல்களைப் பற்றி கருத்து தெரிவிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே, நேரடியாக விமர்சிக்கப்பட்டு, மிரட்டப்பட்டார்கள், இதனால் குழப்பமும் ஏற்பட்டது. அச்சமயத்தில், மௌலானா சாத்: “நான் தான் அமீர். அல்லாஹ்வின் பெயரால், உங்கள் அனைவருக்கும் நான் தான் அமீர்…” என்று கூறினார். இதற்குப் பதிலாக ஒரு முஃமின், “உங்களை யார் அமீராக்கினார்கள்?” என்று கேட்க, மௌலானா சாத் அமைதியாக இருந்தார். பின்னர் மக்கள், “நாங்கள் இதை மறுக்கிறோம்” என்று தெரிவித்தனர், அதற்கு மௌலானா ச’அத் கோபத்துடன்: “அனைவரும் நரகத்திற்குப் (ஜஹன்னம்) செல்லுங்கள்…!” என்று கூறினார்.”

Source: ஆடியோ பதிவு மோலானா சா஦் தான் அமீர் என்று அறிவிக்கிறார்

2015 செப்டெம்பர் – ஃபஜ்ர் பயானின் போது, மௌலானா ச’அத், “இந்த நான்கு சுவருக்குள், என்னைத் தவிர வேறு எந்த அமீரும் இல்லை” என்று கூறினார். அடுத்த பயானில் மௌலானா யாகூப் சாஹிப் அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். மறுநாள், மீண்டும் பயான் செய்ம வந்த மௌலானா ச’அத் “அந்த அமீரில்லை என்று கூறியவர் (மௌலானா யாகூப் சாஹிபை குறிப்பிட்டு) ஒரு மஜ்னூன் (பைத்தியம்). இங்கே என்னைத் தவிர வேறு எவரும் அமீர் இல்லை” என்று கூறினார்.

குறிப்பு: மௌலானா யாகூப், மௌலானா ச’அதின் உஸ்தாத் மட்டுமல்லாமல், அவரது தந்தை மௌலானா ஹாரூனின் உஸ்தாதும் ஆவார்கள்.

Source: Maujudah Ahwal ki Wadhahat se Muta’alliq, பக்கம் 23

2015 அக்டோபர் – மௌலானா ச’அத் அவர்களுக்கு பல எச்சரிக்கைகள் வழங்கப்பட்டது. ஆனால் அவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. இதனால், நிஜாமுத்தீனில் இருந்த சில மூத்த பெரியார்கள் ஒன்று கூடி மௌலானா ச’அத் அவர்களுக்கு ஒரு இஜ்திமாயீ (கூட்டாக) கடிதம் எழுத முடிவெடுத்தார்கள். அந்தக் கடிதத்தில், நிஜாமுத்தீனின் நிலைமை, உலமாக்களை புண்படுத்திய அவரது சர்ச்சையான உரைகள், தஃவத் சம்பந்தமான அவரது கருத்துக்களில் காணப்படும் ‘குளூ’ (எல்லை மீரிய மனப்பான்மை) போன்றவற்றை குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.

அந்தக் கடிதத்தில்:

மௌலானா அப்துர்ரஹ்மான், டாக்டர் ஃகாலித் சித்தீக்,பாய் ஃபாரூக் அஹ்மத் (பெங்களூர்), professor சனாவுல்லாஹ், professor அப்துர்ரஹ்மான், மௌலானா இஸ்மா’ஈல் கோத்ரா ஆகியோர் கையொப்பமிட்டார்கள்.

Source: Majmoo Khutoot, Letter 5, Page 55

2015 நவம்பர் 15 – ராய்விந்த் இஜ்திமா, பாகிஸ்தான். நிஜாமுத்தீன் மர்கஸில் ஏற்பட்ட குழப்பங்களை சரிசெய்ய, ஒரு வலுவான உலக ஷூரா அமைப்பதே சரியான தீர்வாக இருக்கும் என்று பல பெரியார்கள் முடிவு செய்தனர்.

ராய்விந்தில் உள்ள ஹவேலி என்ற இடத்தில் ஒரு மஷூரா நடத்தப்பட்டது. ஹவேலி’ என்பது ராய்விந்த் இஜ்திமாவின் போது அனைத்து பெரியார்களும் தங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கட்டிடமாகும்.

அந்த மஷூராவில் ராய்விந்தில் இருந்து சுமார் 30 பேர், நிஜாமுத்தீனில் இருந்து 25 பேர், பங்களாதேஷில் இருந்து 7-10 பேர், மற்றும் மௌலானா ச’அத் அவர்களின் வளர்ப்பு தந்தை ஹாஜி மும்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அந்தக் கூட்டத்தில் ஹாஜி அப்துல் வஹாப் (ரஹ் ) அவர்கள் புதிய உலக ஷூரா உறுப்பினர்களுக்கான பரிந்துரைகளை கேட்டார்கள். ஆனால் மௌலானா ச’அத் , உலக ஷூராவுக்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பதை கடுமையாக நிராகரித்தார்.மௌலானா ச’அத், ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் அவர்களிடம், “இது அவசியமற்றது. நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன். இதைப் பற்றி இங்கு விவாதிக்கக் கூடாது. நிஜாமுத்தீனின் விஷயங்கள் நிஜாமுத்தீனிலேயே பேசப்பட வேண்டும்!” என்று கூறினார். மஷூவராவில் இருந்த ஹாஜி மும்தாஸ் அவர்கள், “நிஜாமுத்தீனில் ஷுரா அமைப்பது பற்றிய விடயங்களை இங்கு (ராய்விந்தில்) நடத்த வேண்டும் என்று கூறினீர்கள். ஆனால் இப்போது அதை இங்கு செய்யக் கூடாது என்கிறீர்கள், இது எப்படி?” என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மௌலானா ச’அத், “நிஜாமுத்தீன் மர்கஸில் ஏற்கனவே ஒரு ஷூரா உள்ளது” என்றார். யார் அந்த ஷூரா என்று கேட்கப்பட்டபோது, அவர், “நாங்கள் நிஜாமுத்தீனுக்கு திரும்பியவுடன் ஷூராவை உடனடியாக அமைப்போம்” என்று பதிலளித்தார்.

Source: Maujudah Ahwal ki Wadhahat se Muta’all


மஷூராவின் ஃபைசல் அமீர் ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் அவர்கள், மௌலானா ச’அத் அவர்களின் எதிர்ப்புகளைக் கடந்து, ஷூராவுக்கு 11 புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள். புதிய ஷூரா உறுப்பினர்கள் பின்வருமாறு:-

1.ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப், 93 வயது [ஏற்கனவே இருந்த உறுப்பினர்]

2.மௌலானா ச’அத் (நிஜாமுத்தீன்), 50 வயது [ஏற்கனவே இருந்த உறுப்பினர்]

3.மௌலானா இப்ராஹீம் தேவ்லா (நிஜாமுத்தீன்), 82 வயது

4.மௌலானா யாகூப் (நிஜாமுத்தீன்)

5.மௌலானா அஹ்மத் லாத் (நிஜாமுத்தீன்)

6.மௌலானா ஜுஹைருல் ஹசன் (நிஜாமுத்தீன்)

7.மௌலானா நஸ்ருர் ரஹ்மான் (ராய்விந்த்)

8.மௌலானா அப்துர் ரஹ்மான் (ராய்விந்த்)

9.மௌலானா உபைதுல்லாஹ் குர்ஷீத் (ராய்விந்த்)

10.மௌலானா ஜியா’உல் ஹக் (ராய்விந்த்)

11. மௌலானா காரி ஜுபைர் (கக்ரைல்)

12.மௌலானா ரபீ’உல் ஹக் (கக்ரைல்)

13.வாசிஃபுல் இஸ்லாம் (கக்ரைல்)

ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு பின்னர் அனைத்து உறுப்பினர்களாலும் கையெழுத்திடப்பட்டது, ஆனால் மௌலானா ச’அதும் வாசிஃபுல் இஸ்லாம் மட்டும் கையெழுத்திடவில்லை.

அந்த ஒப்பந்தத்தில், நிஜாமுத்தீனில் வசிக்கும் அனைத்து உலக ஷூரா உறுப்பினர்களும் நிஜாமுத்தீன் ஷூராவிலும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Source: Dakwah wa Tabligh Azhim Mehnat ke Maujudah Halat, பக்கம் 19,20

2015 ஆகஸ்ட் 23 அன்று மௌலானா ச’அத் தன்னை உம்மத்தின் அமீராக அறிவித்தது குறித்து மஷூராவில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மௌலானா ச’அத் மறுப்பு தெரிவித்தார். பின்னர், அவரது ஒளிப்பதிவு ஒன்று குறிப்பிடப்பட்டது, அதில் அவர் “அப்போது நான் கோபமடைந்திருந்தேன்” என்று விளக்கமளித்திருந்தார்.

மூலவுரை: தபிளீகி மார்க்காஜ் நிஜாமுதின் குச்ச் ஹகைக், பக்கம் 14

மூலவுரை: உலகளாவிய ஷூரா நியமன கடிதம் 2015

2015 நவம்பர் 16 – மௌலானா ச’அத் வெறுப்பிலும் கோபத்திலும், மற்ற பெரியார்களுக்கு முன்னதாகவே ரைய்விந்தை விட்டு உடனடியாக வெளியேறினார்.

மூலவுரை: தபிளீகி மார்க்காஜ் நிஜாமுதின் டெல்ஹி குச்ச் ஹகைக் குச்ச் வாகித்த, பக்கம் 11

2015 நவம்பர் 17– மௌலானா ச’அத், தனது ஆதரவாளர்களை நிஜாமுத்தீன் மர்கஸில் ஒன்று கூட்டி அவர்களுக்கு முன்பாக பேசினார் “அங்கு (ரைய்விந்த் இஜ்திமாவில்) எந்த ஷூரா அமைப்பும் இல்லை. என்னை அங்கு அவமதித்தனர், டெல்லியின் சில பணியாளர்களும் அவமதித்தனர். நீங்கள் அனைவரும் அவர்களை புறக்கணிக்க வேண்டும்,” என்றார்.

மௌலானா ச’அத் மிகவும் மனவேதனையிலும் கோபத்திலும் இருந்ததால், சில நாட்களுக்கு நிஜாமுத்தீன் மர்கஸில் எந்த ஜமாத்துகளையும் அனுமதிக்கவில்லை. இது நிஜாமுத்தீன் மர்கஸ் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த ஸ்ட்ரைக் ஆகும். மௌலானா ச’அத் டெல்லி சுற்றுவட்டார பள்ளிகளில் அறிவிப்புகள் செய்து, தற்காலிகமாக நிஜாமுத்தீன் மர்கஸுக்கு செல்வதை நிறுத்தும்படி உத்தரவு பிறப்பித்தார். நவம்பர் இறுதியில் இருந்து டிசம்பர் தொடக்கம் வரை, நிஜாமுத்தீன் மர்கஸ் மிகவும் அமைதியாக இருந்தது. அதற்கான ஷப்குசாரி இரவிலும் வெளிநாட்டவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

மூலவுரை 1: டாக்டர் காளித் சித்திகியின் சாட்சியம் – மஜ்மூ குதூத் கடிதம் 8

மூலவுரை 2: தபிளீகி தலைமையின் ஹத்ரத் நிஜாமுதின் டெல்ஹி குச்ச் ஹகைகி குச்ச் வாகிப்பிட்ட (ப12)

2015 டிசம்பர் 6 – ஒரு மாதம் கூட பிந்தவில்லை, மௌலானா ச’அத், முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிராக, நிஜாமுத்தீன் மர்கஸுக்காக தனிப்பட்ட ஷூராவை உருவாக்கினார். இந்த ஷூராவில் அவரது 22 வயது மகன், மௌலானா யூசுஃப் பின் ச’அத் சேர்க்கப்பட்டார். மௌலானா ச’அத் ஒரே அமீராக இருப்பார், ஃபைசலாக இருக்கமாட்டார் . அவரது ஷூரா உறுப்பினர்கள் பின்வருமாறு:

1) மௌலானா ச’அத்

2) மௌலானா இப்ராஹீம் தேவ்லா (தா.ப)

3) மௌலானா யாகூப் சாஹிப்

4) மௌலானா அஹ்மத் லாத் சாஹிப்

5) மௌலானா ஸுஹைருல் ஹசன் சாஹிப்

6) மௌலானா யூசுஃப் பின் ச’அத்

7) மௌலானா அப்துஸ் சத்தார்

8) மியாஜி அஸ்மத்

9) டாக்டர் அப்துல் அலீம்.

மூலவுரை: தபிளீகி தலைமையின் ஹத்ரத் நிஜாமுதின் டெல்ஹி குச்ச் ஹகைகி குச்ச் வாகிப்பிட்ட, பக்கம் 12

2015 டிசம்பர் –இந்த மாதம் முழுவதும், மஷூரா முடிவு இல்லாமல், மௌலானா ச’அத் சில பகுதிகளில் பொறுப்பாளர்களை, தன் போக்குக்கு ஒத்துப்போகாதவர்களை நீக்கி, தனக்கு விருப்பமான நபர்களால் மாற்றினார்.

மூலவுரை: தபிளீகி தலைமையின் ஹத்ரத் நிஜாமுதின் டெல்ஹி குச்ச் ஹகைகி குச்ச் வாகிப்பிட்ட, பக்கம் 12

மௌலானா ச’அத் உடைய ஆதரவாளர்களால் அடிப்படையற்ற ஒரு குற்றச்சாட்டு உருவாக்கப்பட்டது. அதாவது, குஜராத்தின் மக்கள், (அதில் மௌலானா இப்ராஹிம் தேவ்லா, மௌலானா அஹ்மத் லாத், இன்னும் சிலரும் உள்ளனர்), நிஜாமுத்தீன் மர்கஸை அவர்களது கட்டுப்பாட்டில் எடுத்து , மௌலானா ச’அதிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்க விரும்புகிறார்கள் என்று கூறப்பட்டது. இது மிக ஆபத்தான , அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும். முதன்முறையாக, அதிகாரத்தை நாடுதல், குறிப்பிட்ட சமூகத்தை ஆதரித்தல் போன்ற பிழையான கருத்துக்கள் மூத்த பெரியார்களின் மீது சுமத்தப்பட்டது.

அந்த நேரத்திலிருந்து, பொய்கள், குற்றச்சாடுகள், உண்மைகளை திசைதிருப்புதல் மற்றும் வன்முறையான செயல்கள் மௌலானா ச’அதின் ஆதரவாளர்களின் வழக்கமான நடைமுறைகளாகிவிட்டன.

மூலவுரை: தபிளீகி மාර්்க்காஜ் நிஜாமுதின் குச்ச் ஹகைகில், பக்கம் 13

நிஜாமுத்தீன் இரத்தப்பொழிவிற்கு பிறகு

2016 ஜூன் 19 – முதல் முறையாக நிஜாமுத்தீன் மர்கஸில் இரத்தப்பொழிவு ஏற்பட்டது. மௌலானா ச’அதுடைய சேவையில் இருந்த ஒரு கூட்டம் நிஜாமுத்தீன் மர்கஸை ‘சுத்திகரிப்பு’ செய்ய தீர்மானித்தது. மிகச் நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட திட்டத்தில்,முதலில் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் ஜமாத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு கீழே வர அனுமதி அளிக்கப்படவில்லை. முன்பக்க வாசல் உள்ளிருந்து பூட்டப்பட்டது.

ரமழானின் நோன்பு திறந்த பின் சிறிது நேரமே ஆகி இருந்தது. திடீரென, நூற்றுக்கணக்கான வன்முறையாளர்கள் நிஜாமுத்தீன் மர்கஸில் புகுந்தனர். மௌலானா ச’அத் அவர்களுடன் ஒத்துப்போகாத யாரைம் கடுமையாக தாக்கினர். சில மூத்த உறுப்பினர்களின் அறைகள் முற்றிலும் நாசமாக்கப்பட்டது. அங்கிருந்த பொருட்களும் அழிக்கப்பட்டன.

மௌலானா ஸுஹைர் சாஹிப் அவர்களின் வீட்டில் 15 பேருக்கு மேற்பட்ட வன்முறையாளர்கள் கடுமையாக உள்நுழைந்து, பெரும் சேதப்படுத்தினர். வீட்டின் கதவு துண்டுகளாக உடைக்கப்பட்டது. இந்த பயங்கரமான சூழலில், மௌலானா ஸுஹைருல் ஹசன் சாஹிப் அவர்களால் மஸ்ஜிதிற்கு சென்று தராவீஹ் தொழுகையை நடத்த முடியவில்லை. அவர்களின் குடும்பம் முழு இரவையும் அச்சத்திலும் பயத்திலுமே கழித்தது; மறுநாள் காலை சஹருக்கான எந்த ஏற்பாடுகளும் செய்ய முடியவில்லை.

இதில் சிலர் முதல் மாடிக்கு (மௌலானா யாகூப் சாஹிப் மற்றும் மௌலானா இப்ராஹிம் சாஹிப் அவர்களின் அறைகள் இருந்த இடம்) சென்றனர், இரு அறைகளின் பூட்டுகளையும் உடைத்து உள்ளே இருந்த பொருட்களை திருடினர். இந்த அறைகளில் ஒன்றை மௌலானா அஹ்மத் லாத் அவர்களின் விருந்தினர்கள் பயன்படுத்தினர். இந்த வெளிப்படையான வன்மத்தை மௌலானா அஹ்மத் லாத் சாஹிப் அவர்கள் அறிந்ததும், அடுத்த நாளே தனது ஊருக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள்.

எல்லா இடத்திலும் இரத்தக்கறை படிந்திருந்தது. நிஜாமுத்தீன் மர்கஸின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பெண்களின் கதறல்களும் பயந்த குழந்தைகளின் அழுகைகளும் கேட்டுக் கொன்டு இருந்தது. வன்முறையாளர்கள் நிஜாமுத்தீன் மர்கஸின் வெளியில் உள்ள கடைகளுக்கு சென்று, குஜராத்தியர்களுக்கு சொந்தமான அல்லது அவர்களுடன் தொடர்புடைய கடைகளை கொள்ளையடித்து அழித்தனர். இந்த கலவரத்தினால் சிலர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சிலர் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டதனால், ICU-க்கு கொண்டு செல்ல வேண்டி இருந்தனர்.

.

போலிஸ் அதிகாரிகள் வந்தனர், பின்னர் நிஜாமுத்தீன் மர்கஸ் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த வன்முறையாளர்களுக்கு எதிராக மொளானா ச’அத் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் தன்னுடன் ஒத்துப்போகாத உள்ளூர் மக்கள் குறித்து மட்டுமே அதிகாரிகளிடம் புகார் செய்தார். அவர் அளித்த விளக்கங்கள் , நிகழ்ந்த சம்பவங்களுடன் ஒருசிறிதும் பொருந்தவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது கூட நடைபெறவில்லை.இந் நாளில், முஸ்லிம்களின் நெறிமுறை, கண்ணியம், அன்பு, முஸ்லிம் சகோதரர்களுக்கு மரியாதை செலுத்துவது ஆகியவை அனைத்தும் துண்டுகளாக உடைக்கப்பட்டன.

மூலத்துடன்: தப்ளிகி தலைமையகம் ஹத்ரத் நிசாமு்த்தின் டெல்லி குறித்து சில உண்மைகள், பக்கம் 13.

நிசாம் உத்தின் முதல் அடிக்கட்டு: எப்போது எங்கள் முதியவர்கள் வெளியேறினார்கள் என்று பார்க்கவும்.

2016 ஜூன் 20 – நிஜாமுத்தீனில் ‘இரத்தப் பொழிவு’ என்ற செய்தி உடனடியாக எல்லா உள்ளூர் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பரவியது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக மௌலானா உபைதுல்லாஹ் பெல்யாவி சாஹிப் அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவரும் இருந்தார், “ஒரே ஒருவரின் பேராசை, கோபத்தின் காரணமாக நிஜாமுத்தீன் மர்கஸின் புனிதத்தன்மை சேதமடைந்தது” என்று அவர் ஒரு ஆடியோவில் நடந்தவைகளைப் பற்றி கருத்து தெரிவித்தார்.

மௌலானா ச’அதை சந்திக்க பல அறிஞர்கள் வந்தனர், அதில் முஃப்தி அபுல் காசிம் நுஃமாணி, மௌலானா சலீமுல்லாஹ் ஃகான் ஆகியோரும்இருந்தனர். தாருல் உலூம் தேவ்பந்தின் மூத்த முஃப்தியாக அறியப்படும் மௌலானா அர்ஷத் மதனி சாஹிப் (தா.ப)கூட ரமழானின் கடைசி 10 நாட்களில் தன் இஃதிகாஃபை நிறுத்தி மௌலானா ச’அதை சந்திக்க வந்தார்கள். அவர்களின் அறிவுரைகளை மௌலானா ச’அத் புறக்கணித்ததால், அவர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர். மௌலானா அர்ஷத் மதனி சாஹிப் ஒரு ஆடியோவில், “மௌலானா ச’அதுக்கு நல்ல குணநலன்களுடன் வளர்ப்பு கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது” என்று கூறினார்கள்.

மூல 1: தப்ளிகி தலைமையகம் ஹத்ரத் நிசாமு்த்தின் டெல்லி குறித்து சில உண்மைகள், பக்கம் 13,14.

மூல 2: மேலாண்மைக் ஆர்ஷட்மதானியின் 5:26 இல் ஆடியோ “மேலாண்மைக் சaad சரியான தாவிய்யா எடுக்கவில்லை”

2016 ஜூலை 17 – மௌலானா ச’அத் எல்லா ஆலோசனைகளையும் புறக்கணித்ததால், சில மூத்த பெரியார்கள் மௌலானா ச’அதுக்கு ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கங்களில் சிலவற்றின் மொழிபெயர்ப்பு:

“கடந்த நூற்றாண்டுக் காலமாக நிலவி வந்த நிஜாமுத்தீனின் புனிதத் தன்மை சமீபத்திய நிகழ்வினால் அழிந்து போயுள்ளது. இதை தவறாகத் தலைமைப் பதவி மோதலாக விளக்குகின்றனர், ஆனால் உண்மையில் இது தப்லீக் உழைப்பின் சரியான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட *முறைகள்/கொள்கைகளிற்கும்* ஒரு தனி நபரின் அங்கீகரிக்கப்படாத *புதுமைகளுக்கும்* இடையேயான மோதல் ஆகும். இவ்வளவு காலமாக இந்த பிரச்சினையை தீர்க்க நாங்கள் முயற்சித்தோம், ஆனால் இப்போது உங்கள் ஆதரவாளர்கள், உங்களுடன் ஒத்துப் போகாத எவரையும் வன்முறை மற்றும் உடல் வலியுறுத்தலுக்குள் கொண்டு வரக்கூடிய சிலர் மீது இந்த விடயத்தை விட்டுவிட்டனர்.

இந்த பிரச்சினையின் மையம் என்னவென்றால், மௌலானா யூஸுஃப் (ரஹ்) மற்றும் மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) ஆகியோரின் காலத்திலிருந்தே உழைப்பில் ஈடுபடும் மூத்தவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அசலான முறையுடனும் ,அங்கீகரிக்கப்பட்ட ஷூராவின் மேற்பார்வையிலும் என்றென்றும் இந்த உழைப்பு தொடர வேண்டும் என்று வேண்டினர், ஆனால் இப்போது உங்கள் ஆதரவாளர்கள் உங்களது வரையறைகள் அற்ற தலைமைத்துவத்தை திணிக்க முயற்சி செய்கின்றனர்.”

“மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் ஒரே அமீரின் கீழ் பணி தொடர்வதை எப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதர்களில் எவரும் பூர்த்தியானவர்கள் இல்லை,மேலும் காலம் செல்ல செல்ல அவர்களின் குறைபாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் பரிந்துரைத்தது போல் இந்த உழைப்பு, வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து நடைபெறுவதற்காக ஒரு சிறப்பு ஜமாஅத்தை உருவாக்குவதே தற்போதைய பிரச்சனையின் தீர்வாகும்.இதுவே எங்கள் நிலைப்பாடும் ,உள்ளூர்,வெளிநாட்டு மூத்தோர்களின் நிலைப்பாடும் ஆகும்.நீங்கள் அறிமுகப்படுத்திய புதுமைகள் முந்தைய மூன்று ஹஜ்ரத் ஜீக்களுடைய காலத்தில் ஏற்கப்பட்டதோ அல்லது இருந்ததோ இல்லை, இந்த பிரச்சனை நம்மை பிரிக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, இதைப் பலமுறை உங்களது கவனத்திற்கு கொண்டுவந்தோம்.மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் எச்சரித்த அபாயத்திலிருந்து அல்லாஹ் தஆலா நம்மை பாதுகாப்பானாக: *‘இந்த உழைப்பு சம்பந்தமான உசூல் மீறப்பட்டால், நூற்றாண்டுகள் கழித்து வரவிருக்கும் ஃபித்னாக்கள் சில நாட்களில் வந்துவிடும்.’* அதன் அடையாளங்கள் தற்போது தெளிவாகக் காணப்படுகின்றன.

இரண்டாவது, உங்கள் பயான்களில் மத்ஹபிற்கு எதிரான கருத்துகளை கூறியிருக்கிறீர்கள். அவை, பெரும்பாலான உலமாக்களின் இஜ்மாவிற்கு முரண்படுகின்றன. இந்த கருத்துக்கள் உங்களை பின்பற்றுபவர்களினால் பரப்ப்பட்டு நடைமுறையில் கொண்டு வரப்படுகிறது. இதனால் இந்த முயற்சி எந்த திசையில் செல்லும் என்று உலமாக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நீங்கள் மத அமைப்புகளையும் சில நபர்களையும் விமர்சிக்கிறீர்கள்.இந்த உழைப்பு எல்லோருக்கும் திறந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக நமது மூன்னோர்கள் மற்றவர்களை விமர்சிக்கவோ இகழவோ, அல்லது எதிர்மறையாக ஒப்பிடவோ கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அல்லாஹ் (ஸுப்ஹானஹூ வ தஅலா) இந்த முயற்சியை மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் மூலமாகப் புதுப்பித்தான், இந்த முயற்சியின் விளக்கத்தை குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஸஹாபாக்களின் வாழ்க்கை வெளிச்சத்தில் மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்களின் வழியாக தெளிவுபடுத்தினான்;மேலும் மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்களின் வழியாக இந்த முயற்சியின் வழிமுறையை பாதுகாத்து, அதனை விரிவாக்கமும் செய்தான். இந்த உழைப்பின் முறைகளை மாற்றுவது அவசியமாகவே இருந்தால், அதற்கான மாற்றம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளின் ஷூராவின் ஒருமித்த ஒப்புதலின் மூலம் தான் செய்யப்பட வேண்டும்.

நாங்கள் எங்கள் வாழ்க்கையின் இறுதியில் இருக்கிறோம்.மேலும் நிஜாமுத்தீனில் தற்போது நடந்து வரும் இந்த உழைப்பின் முறையுடன் எங்களது ஒப்புதல் இல்லை என்று கூற விரும்புகிறோம். அதனால் தான் நாங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் மஷூராக்களில் கூட பங்கேற்பதில்லை. இந்த உழைப்பு மஷூராவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட வேண்டும். இல்லையெனில், நீங்கள் செய்யும் மாற்றங்களுக்கு ஒப்புக்கொள்ளாத அனுபவமுள்ள மூத்த பணியாளர்களை இழக்க நேரிடும்.

தப்லீக் எங்கள் வாழ்க்கையின் நோக்கமாகும், மேலும் நிஜாமுத்தீன் எங்களது தாயகமாகும். நிலைமைகள் மேம்பட்டால், இன்ஷா அல்லாஹ், நாங்கள் உடனடியாக நிஜாமுத்தீனுக்கு திரும்புவோம். இன்று, உலகம் முழுவதும் உள்ள பணியாளர்கள் தங்கள் உண்மையான கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நிஜாமுத்தீனில் நடைபெறும் விவகாரங்களைப் பற்றியே விவாதிக்கின்றனர். ஒவ்வொரு மஷூராவும் நிஜாமுத்தீனைச் சுற்றியே அமைகிறது. அல்லாஹ் எங்கள் இதயங்களில் உள்ள துயரத்தை நீக்கி, எங்களை மார்க்கத்தின் சரியான திசையிலும், உண்மையான கவலையிலும் கரிசனையிலும் மீண்டும் கொண்டு வருவானாக. ஆமீன்.

கையொப்பமிட்டவர்கள்: மௌலானா இஸ்மா’ஈல் கோத்ரா, மௌலானா அப்துர்ரஹ்மான் மும்பை, மௌலானா உஸ்மான் ககோசி, ஹாஜி ஃபாரூக் அஹ்மத் பெங்களூர்,முஹ்ஸின் ஒட்டோமான் லொக்னொவ், ப்ரொஃபஸர் ஸனாவுல்லாஹ் ஃகான் அலிகர், ப்ரொஃபஸர் அப்துர்ரஹ்மான் மத்ராஸ்.

மூலங்கள்: மஜ்மூ குத்தூத், கடித எண் 14, பக்கம் 93

2016 ஜுலை 18 –தப்லீக் ஜமா’அத்தின் புதிய அமீராக வேண்டும் என்று அவர் விரும்புவதாக -மௌலானா ஜுஹைருல் ஹஸன் சாஹிப் (தா.ப), அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டின் காரணமாக, அக்குற்றச்சாட்டை எதிர்க்கும் விதத்தில் மௌலானா ஜுஹைருல் ஹஸன் சாஹிப் ஒரு கடிதம் எழுதினார்கள், அதில்:

“நான் மிகவும் பணிவுடன் கூற விரும்புவது என்னவெனில், ஒருபோதும் நான் அமீராக ஆக வேண்டும் என விரும்பியதில்லை அல்லது அதை கோரியதுமில்லை. மறைந்த என் தந்தை, மௌலானா ஜுபைருல் ஹஸன் சாஹிப் (ரஹ்) அவர்கள், தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் அமீராக வேண்டும் என கோரியதுல்லை அல்லது விரும்பியதும் இல்லை. அவர்கள் எப்போதும் உள்ளூர் மற்றும் உலக மஷூராக்களை முழுமையாக பின்பற்றினார்கள். அப்படியான நிலையில், நான் எப்படி இமாரத் கோரத் துணிய முடியும்?” என எழுதினார்கள்.

மூலங்கள்: தெக்வா வா தொப்ளிகின் அஜிம் முயற்சியின் மௌஜூதாக்கள், பக்கம் 32

காலப்போக்கில், தப்லீக் ஜமா’அத்தின் அமீராவதற்கான ஆசை மௌலானா ச’அத் அவர்களிடமிருந்தே வந்தது என்பது தெளிவாகியது. அல்லாஹ்வின் நாட்டத்தினால், மௌலானா ஜுஹைர் சாஹிப் (தா.ப) அவர்களின் நற்பெயர் இந்த பொய்க் குற்றச்சாட்டில் இருந்து பாதுகாக்கப்பட்டது.

மூலங்கள்: ஆஹ்வால் வா அச்சர், பக்கம் 78

2016 ஆகஸ்ட் 12 – 2016 ஆகஸ்ட் 12 – சகாக்கள் அனைவரும் விலகிச் சென்றபோதிலும், மௌலானா இப்ராஹீம் தேவ்லா சாஹிப் (தா.ப) அவர்கள் நிஜாமுத்தீன் மர்கஸில் தப்லீகுடைய முயற்சியை காப்பாற்ற முடியும் என நம்பினார்கள்.ஆனால், மௌலானா ச’அத் அவர்களின் ஆதரவாளர்கள் மௌலானா இப்ராஹீம் சாஹிப் அவர்களை தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் “மௌலானா, உங்களுக்கு இங்கு வசதியாக இல்லையெனில் வெளியேறிவிடுங்கள்.” என்று அடிக்கடி கூறினர்.

இந்த நிலையில், மௌலானா இப்ராஹீம் சாஹிப் இறுதியாக நிஜாமுத்தீன் மர்கஸை விட்டு வெளியேற தீர்மானித்தார்கள். மௌலானா ச’அதுடைய ஆதரவாளர்கள் அவர்களை அமைதியாக வெளியேறும்படி , அங்கு நடந்த சம்பவங்களை வெளியிடவே கூடாது என்றும் கடுமையாக எச்சரித்தனர். இதற்கிடையில், மௌலானா இப்ராஹீம் சாஹிப் (தா.ப) உடல்நலக் குறைவால் வெளியேறினார்கள் என்று ஒரு பொய்க் காரணத்தை பரப்பினர்.

மூலங்கள்: தாப்ளிகி தலைமையகம் ஹத்ரத் நிஜமுத்தீன் டெஹ்லி சில கதை மற்றும் சில விவரங்கள், பக்கம் 14

2016 ஆகஸ்டு 15 –மௌலானா இப்ராஹீம் தேவ்லா சாஹிப் (தா.ப) நிஜாமுத்தீனை விட்டு வெளியேறியதற்கான காரணங்களைப் பற்றிய பொய் வதந்திகள் பரவத் தொடங்கின.இதை தெளிவுபடுத்த, மௌலானா இப்ராஹீம் தேவ்லா (தா.ப) தப்லீக் பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதினார்கள்.அதில், தாம் நிஜாமுத்தீனை விட்டு வெளியேறியதற்கான வதந்திகளை முழுமையாக மறுத்தார்கள்.

மூலங்கள்: மவ்லானா இப்ராஹிம் தேவ்லாவின் கடிதம்

2016 ஆகஸ்ட் 27 –நிஜாமுத்தீனின் மிகமூத்த பெரியாரும், மௌலானா ச’அத் மற்றும் அவரது தந்தை மௌலானா ஹாரூன் ஆகியோரின் ஆசிரியராகிய மௌலானா யஃ’கூப் சாஹிப், மௌலானா ச’அத் மீது கண்டனம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார்கள்.

மூலங்கள்: மவ்லானா யாக்கூத்தின் கடிதம்

2016 அக்டோபர் 13 -சவூதி அரேபியப் பெரியார்கள், ஷைய்ஃக் கஸ்ஸான் மதீனா மற்றும் ஷைய்ஃக் ஃபாதில் மக்கா,மௌலானா ஸஃதை சந்தித்து, மௌலானா ஸஃதுக்கும் பெரியார்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை தீர்ப்பதற்காக, பேச்சு வார்த்தை நடாத்த மற்ற பெரியார்களையும் அழைத்தனர். இந்த அழைப்பை ஏற்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மூத்த பெரியார்கள் ஒன்று சேர்ந்தனர்.சவூதி பெரியார்களின் தலைமையில், ஒப்புக்கொண்ட சந்திப்பிற்காக ஒன்று கூடினர்.

எனினும் மௌலானா ஸஃத் மூத்தவர்களை சந்திக்க மறுத்தார். அதற்கு பதிலாக, அரபிப் பெரியார்களிடம் மிரட்டும் விதத்தில்: “அவர்கள் இதைப் பற்றி பேச முயன்றால், நான் கோபமடைந்து என் குரலை உயர்த்துவேன். அப்படி நடந்தால், ஒரு மணி நேரத்தில் இந்த மர்கஸ் முழுவதும் மேவாத்திகள் நிரம்பிவிடுவார்கள். அதற்கு பிறகு, இந்த மர்கஸை விட்டு வெளியேறுவது மட்டுமல்ல, என் அறையை விட்டு வெளியில் செல்வது கூட இயலாமல் போய் விடும் .” என்று கூறினார்.

அடுத்த நாள், அரேபிய மூத்தோர்களை காவல்துறையினர் நேரில் சந்தித்தனர். அவர்கள் பயங்கரவாதிகள் என புகார் அளிக்கப் பட்டிருப்பதாகக் கூறினர். இதைக் கேட்ட அந்த பெரியார்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை, மேலும் அரபிப் பெரியார்களும் முன்னாள் நிஜாமுத்தீன் பெரியார்களும் கவலையுடன் திரும்பிச் சென்றனர்.

மூலங்கள்: ஷெய்க் க்காஸன் மதினா மற்றும் ஷெய்க் ஃபதீல் மக்காவின் கடிதம்

2016 நவம்பர் 13 – ரைய்விண்த் இஜ்துமா, பாகிஸ்தான். உழைப்பின் தற்போதைய பிரச்சனைகளை தீர்க்க அங்கே வருகை தருமாறு பல அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், மௌலானா ஸஃத் ரைய்விண்த் இஜ்துமாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். அனைத்து மூத்த பெரியார்களும் ரைய்விண்த் இஜ்துமாவிற்கு வந்திருந்தார்கள், ஆனால் அவர் மட்டும் வரவில்லை.

நிஜாமுத்தீன், கக்ரைல் மற்றும் ரைய்விந்திற்காக நியமிக்கப்பட்ட தூதுக்குழுவினர்களின் முன்னிலையில், ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் (ரஹ்) கூறினார்கள்:.

“எந்த ஒரு தனிப்பட்ட அமீரத்தும் இங்கே நடைமுறையில் இல்லை. 1995-ல் எதற்கு ஒப்புக்கொண்டோமோ, அதுதான் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும். நேற்று நிஜாமுதீனிலிருந்து வந்தவர்களிடம் நான் பேசினேன். ஸஃத் அவர்களின் எண்ணத்தில் ‘நான் அமீர்’, ‘நான் இன்னார்’ என்ற எண்ணங்கள் இருந்தாலும், அனைவரும் அவரிடம் பை’அத் செய்தாலும், அது செயல்படாது” (அதாவது அது வெற்றி பெறாது என்ற உண்மையை குறிக்கிறார்கள்). “எதை ஒப்புக்கொண்டோமோ அதுதான் நடக்கும்.”

நான் நிஜாமுத்தீனரிடம் இவ்வாறும் கூறினேன்: “ஷூரா உறுப்பினர்கள் என்னிடம் வந்தனர், அவர்களுடன் ஆலோசித்த பிறகு, நான் அவர்களுடன் உடன்படுகிறேன். முன்பு பல நாடுகளில் இருந்து பிரச்சனைகள் எழுந்தபோது, மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்கள் – ‘என் ஷூரா உறுப்பினர்கள் இங்கே இல்லை; சிலர் மக்காவில், சிலர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடிய பிறகே முடிவுகள் எடுக்கப்படும்’ என்று தெளிவாகக் கூறிவிடுவார்கள்”

மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) அவர்களின் வஃபாத்திற்குப் பிறகு, நாம் ஒரு மஷூராவில் உட்கார்ந்திருந்தோம். அப்போது மௌலானா ஸஃத் : “நான் அமீராக நியமிக்கப்பட்டால், மௌலானா ஜுபைர் அவர்களை ஆதரிப்பவர்கள் இந்த முயற்சியிலிருந்து விலகி விடுவார்கள். மௌலானா ஜுபைர் அமீராக நியமிக்கப்பட்டால், என்னை ஆதரிப்பவர்கள் விலகி விடுவார்கள். ஆகவே, இந்தப் பணியை மஷூரா மூலமே நடத்த வேண்டும், பய்’அத் எடுக்கக் கூடாது.” என்று கூறினார்.இக்கருத்தை அனைவரும் ஒத்துக் கொண்டனர். ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அனைவரும் நிஜாமுத்தீனின் மக்களைப் பொருட்படுத்தி, நிஜாமுத்தீனிற்கு திரும்பிச் செல்லுங்கள். அங்கு சென்று அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். மஷூராவில் முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து செயல்படுங்கள். மேலும் : ‘யா அல்லாஹ், முழு மனிதசமுதாயத்தையும் என் முன்னிலையில் வைத்துக் கேட்கிறேன், நான் என்ன செய்ய வேண்டுமோ, அதை என் உள்ளத்தில் தெளிவுபடுத்துவாயாக.’ ” இவ்வாறு துஆ செய்யுங்கள என்றும் கூறினார்கள்.

ச्रोतம்: ஹாஜி அப்துல் வாஹாபின் அறிக்கைகள் (ஆடியோ பதிவு)

2016 நவம்பர் – தாருல் உலூம் தேவ்பந்த், மௌலானா ஸஃத் அவர்களை எச்சரித்தும், ஃபத்வா வெளியிடப் போவதைப் பற்றி அறிவிப்பதற்காகவும் ஒரு கடிதம் அனுப்பினார்கள், ஃபத்வா வெளியிடுவதற்கு முன், அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கி, அவரது பெயரையும் கௌரவத்தையும் பாதுகாப்பது சிறந்தது என்று அவர்கள் கருதினார்கள்.

ச्रोतம்: மவ்லானா சவ்தின் ரூஜூ (இங்கிஷாப் ஹஃகீக்கத், தவ்உ மற்றும் தப்லீக் நெருக்கமானம்)

2016 நவம்பர் 30 –மௌலானா ஸஃத், தாருல் உலூம் தேவ்பந்திற்கு ஒரு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பி, ருஜூ – தன் கருத்துக்களை திரும்பப்பெற வேண்டியது குறித்து கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த கடிதத்தைப் பார்த்த தாருல் உலூம் தேவ்பந்த் திருப்தியடையவில்லை, ஏனெனில் அந்த கடிதத்தில் அவர் தன் பிழைகளை சரிபடுத்த முயன்றிருந்தார். மேலும், தாருல் உலூம் தேவ்பந்த் அவர் மீது மோசமான எண்ணங்கள் கொண்டிருப்பதாகவும், தஃவா பணியை எதிர்க்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார். அவர் எழுதியதில் சிலது இங்கு:

உலகளாவிய கல்வி மையத்திற்கு பொறுப்பானவர்களாக இருக்கும் உங்களைப் போன்ற முக்கியமான மக்களிடமிருந்து வரும் கெட்ட எண்ணங்களை, மிகவும் வருத்தமான விஷயமாக இந்த தாழ்மையானவன் கருதுகிறேன். இந்த தவறான எண்ணங்கள், இந்த தாழ்மையானவனினதும், என்னுடன் செயல்படுகின்றவர்களினதும் கோட்பாடுகள், நிலைகள் மற்றும் முறைகள் பற்றியும், ஆசீர்வதிக்கப்பட்ட இந்த உழைப்புடன் ஒத்துழைக்காமையையும் காட்டுகின்றது.

மௌலானா ஸஃதின் முதல் ருஜூ கடிதம், நவம்பர் 30.

ச्रोतம்: மவ்லானா சவ்தின் முதல் ரூஜூ

2016 டிசம்பர் 6 – தாருல் உலூம் தேவ்பந்தினால் மௌலானா ஸஃதுடைய முதல் ருஜூவின் முறையை ஏற்க முடியவில்லை. அதனால் மௌலானா ஸஃதுக்கு எதிராக தங்களுடைய ஃபத்வாவை வெளியிட்டனர்.

ச्रोतம்: தருல் உலூமின் சநா மவ்லானா சவ்து மீது வெளியாகிய முதல் ஃபட்வா, மவ்லானா சவ்தின் ரூஜூ

2016 டிசம்பர் 11 –மௌலானா ஸஃத் தாருல் உலூம் தேவ்பந்துடன் சமாதானம் செய்ய இரண்டாவது ருஜூ கடிதத்தை அனுப்பினார். இதனால் திருப்தி அடைந்த தாருல் உலூமுடைய உலமாக்கள், இரண்டு நாட்கள் கழித்து மௌலானா ஸஃதை சந்திக்க ஒரு குழுவை அனுப்பினர்.

அல்லாஹ் த’ஆலாவின் நாட்டத்தின் பிரகாரம், ஒரு திருப்பம் ஏற்பட்டது , இக்குழுவினர் மௌலானா ஸஃதை சந்திக்கப் போகும் பிரயாணத்தில் இருந்தபோது, மௌலானா ஸஃத் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) குறித்து சர்ச்சையான கருத்துக்களை அன்றைய ஃபஜ்ர் பயானில் மீண்டும் பேசியிருக்கிறார் என்ற அதிர்ச்சியான தகவல் ஓடியோ சாட்சியுடன் தேவ்பந்தின் உலமாக்களுக்கு கிடைத்தது, அதனால் தேவ்பந்த் தமது குழுவை திரும்ப அழைத்துக் கொன்டனர்.

ச्रोतம்: மவ்லானா சவ்தின் இரண்டாவது ரூஜூ

2016 டிசம்பர் – தப்லீக் ஜமாஅத்தின் பிறப்பிடமான மழாஹிருல் உலூம் சஹ்ரான்பூர், தாருல் உலூம் தேவ்பந்தின் ஃபத்வாவுக்கு ஆதரவாக மௌலானா ஸஃதிற்கு எதிரான ஒரு ஃபத்வா/ தனது நிலைப்பாட்டை வெளியிட்டது. இது மௌலானா ஸஃதின் மாமனார் மௌலானா சல்மான் சஹ்ரான்பூர் அவர்கள் உட்பட, இன்னும் 8 அறிஞர்களால் கையெழுத்திடப்பட்டது.

ச्रोतம்: மசாஹிருல் உலூம் சஹரன்பூரின் ஃபட்வா மவ்லானா சவ்து

2016-2018 –பல உலகளாவிய அமைப்புகளினால் மௌலானா ஸஃதிற்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் 40ற்கும் மேற்பட்ட ஃபத்வாக்கள்/நிலைப்பாடுகளை நாங்கள் சேகரித்துள்ளோம். அவை அவர் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றியும் அவர் அஹ்லுச் ஸுன்னஹ் வல் ஜமாத்தின் வழியிலிருந்து விலகியுள்ளதைப் பற்றியும் கவலைகள் எழுப்பியுள்ளன.”

ச्रोतம்: மவ்லானா சவ்திற்கு எதிரான 40+ ஃபட்வாக்களின் தொகுப்பு

2017 – தாருல் உலூம் தேவ்பந்துடைய நற்பெயரை கெடுக்கும் வகையில் ஒரு போலி ருஜூ கடிதம் பரப்பப்பட்டது. இந்த போலி ருஜூ கடிதம், மௌலானா ஸஃதுடைய உண்மையான ருஜூ கடிதமாகத் தவறாகக் சித்தரிக்கப்பட்டது. அந்த கடிதத்தில், மௌலானா ஸஃத் உண்மையாக மன்னிப்பு கேட்டு, ஷூராவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

2017 செப்டம்பர் – பங்களாதேஷுடைய முன்னணி மூத்த உலமாக்கள் இந்த விவகாரத்தில் தங்களது ஆதரவை வழங்க முடிவு செய்தனர். எனவே அவர்கள் , அரசியல் பிரதிநிதிகளுடனும், கக்ரைல் ஷூரா உறுப்பினர்களுடனும், தாருல் உலூம் தேவ்பந்தைச் சேர்ந்த உலமாக்களுடனும் சந்திப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். சமாதானத்தை நிலைநிறுத்த, மௌலானா ஸஃத் அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.அவைகளை கடைப்பிடித்தால் மட்டுமே டொங்கி இஜ்திமாவில் அவரால் கலந்து கொள்ள முடியும் என்று கூறப்பட்டது:

ச्रोतம்: இங்கிஷாப் ஹஃகீக்கத், பக்கம்10

  • மௌலானா ஸஃத், மௌலானா இப்ராஹீம் சாஹிப் (தா.ப) மற்றும் மௌலானா அஹ்மத் லாத் சாஹிப் (தா.ப) ஆகியோருடன் சமாதானமாகி, டொங்கி இஜ்திமாவிற்கு அவர்களுடன் சேர்ந்து வர வேண்டும்..

  • அவர் தருல் உலூம் தேவ்பந்துடன் தனது ருஜூவை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்

மூ來源: இன்கிஷாப் ஹக்கீகத், பக்கம் 22

2017 நவம்பர் 11 – ரைவிந்த் இஜ்துமா, பாகிஸ்தான். மௌலானா ஸஃத் இதில் பங்கேற்கவில்லை. ஆனால், நிசாமுத்தீனில் இருந்து ஒரு தூதுக்குழு வந்தது, இதில் மௌலானா ஷௌகாத், முஃப்தி ஷெஹ்சாத் மற்றும் பாய் முர்சலின் ஆகியோர் அடங்கியிருந்தனர். ஹாஜி அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள், உலகெங்கிலும் இருந்து சுமார் 500 பேர் கொன்ட பொறுப்பான சகோதரர்கள் மற்றும் ஷூராக்களை ரைவிந்த் மர்கஸில் காலை 11:00 மணிக்கு ஒன்றுகூடச் செய்தார்கள்.ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப், இஃக்திலாஃபை விளக்கினார்கள். தப்லீகின் இரண்டாவது அமீர் மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்கள் கூறிய சிலபொன்மொழிகளை வாசித்த பிறகு, அவர்கள் மேலும் கூறினார்கள்:

நிசாமுத்தீன் மர்கஸில் உள்ளவர்கள் மனமுவந்து தவ்பா, இஸ்திஃக்ஃபார் செய்ய வேண்டும். உங்களில் எவரும் நிசாமுத்தீனிற்கு செல்லக்கூடாது. இப்போது நிசாமுத்தீன் மர்கஸ் முன்பு போல் இல்லை. நிசாமுத்தீன், அல்லாஹ்வின் பாதையில் செல்லாதவர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை மௌலானா ஸஃத் கூட அல்லாஹ்வின் பாதையில் 40 நாட்களாயினும் சென்றதில்லை.

மூ来源: ஹாஜி அப்துல் வஹாப் அவர்களின் கருத்து, ரெய்விந்து இஜ்திமா, நவம்பர் 2017

2018 ஜனவரி 10 – மௌலானா ஸஃத் பங்களாதேஷுடைய டொங்கி இஜ்துமாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.மௌலானா ஸஃத் 2017 செப்டம்பரில் பங்களாதேஷைச் சேர்ந்த உயர்ந்த உலமாக்கள் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதே இதற்கான காரணமாகும்.

  • மௌலானா ஸஃத், மௌலானா இப்ராஹீம் சாஹிப் (தா.ப) மற்றும் மௌலானா அஹ்மத் லாத் சாஹிப் (தா.ப) ஆகியோருடன் சமாதானம் செய்யும் முயற்சியை சிறிதளவு கூட மேற்கொள்ளத் தவறிவிட்டார்.

  • இன்றும் மௌலானா ஸஃத், அஹ்லுஸ் சுன்னஹ் வல் ஜமாஅத்தின் பாதையிலிருந்து விலகியவராகவே கருதப்படுகிறார். அவர் தாருல் உலூம் தேவ்பந்துடன் தனது ருஜூவை நிறைவேற்றவில்லை

எனினும் மௌலானா ஸஃத் தாய்லாந்திலிருந்து சுற்றுலா விசாவுடன் பங்களாதேஷ் நுழைந்தார். இச்செயல் அங்குள்ள உலமாக்களுக்கு தெரியவந்ததும், அது பங்களாதேஷின் மூத்த உலமாக்களின் உத்தரவுக்கு எதிராகவும், அவர்களுக்கான அவமரியாதையாகவும் இருந்ததனால் கடும் கோபமடைந்தனர். ஆயிரக்கணக்கான உலமாக்கள் மௌலானா ஸஃதுடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்கா, ஷாஹ்ஜாலால் விமான நிலையத்தின் அனைத்து வழிகளையும் மறித்தனர்.

வாசிஃபுல் இஸ்லாம் ரகசியமாக மௌலானா ஸஃதை டாக்கா விமான நிலையத்திலிருந்து பின்னணி வழி மூலம் கக்ரைல் மர்கஸுக்கு கொண்டுபோனார். இந்த நடவடிக்கை தெரியவந்தபோது, ஆயிரக்கணக்கான உலமாக்கள் கக்ரைல் மர்கஸை சுற்றி வழைத்து மர்கஸிலிருந்து வெளியேரும் அனைத்து வழிகளையும் மறித்தனர்.

மூ来源: தாக்கா டிரிப்யூன்

2018 ஜனவரி 11 –பங்களாதேஷினுடைய 53’ன்றாவது டொங்கி இஜ்துமா தொடங்கியது. மௌலானா ஸஃதுடைய வருகைக்கு எதிராக பெரும் போராட்டங்கள் ஏற்பட்டதால், பங்களாதேஷ் அரசு மௌலானா ஸஃத் மற்றும் அவரது ஆதரவாளர்களை கக்ரைல் மர்கஸிலிருந்து வெளியேற தடை விதித்தது.

மூ来源: தாக்கா டிரிப்யூன்

2018 மார்ச் 20 – பல்வேறு நாடுகளில் இருந்து இந்த பிரச்சினைகளின் காரணத்தைச் பற்றி கேள்விகள் எழுப்பினர். இதற்கிடையில், மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் (ரஹ்) ஒரு தெளிவான அறிக்கையும் இறுதி எச்சரிக்கையையும் வெளியிட்டார்கள்.

“இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒரு தனி நபரை சார்ந்துள்ளது

(1) மௌலானா ஸஃத் ஷூராவை ஏற்றுக்கொன்டு, அவர்களுக்கிடையே மாறி மாறி செயல்படும் ஃபைசல் முறையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

(2) தப்லீக் உழைப்பை மௌலானா இல்யாஸ் (ரஹ்), மௌலானா யூஸுஃப் (ரஹ்), மற்றும் மௌலானா இனாமுல் ஹஸன் (ரஹ்) ஆகியோரின் அங்கீகரிக்கப்பட்ட, அசல் முறையிலும் கொள்கையிலும் தக்கவைக்க வேண்டும். மௌலானா ஸஃத், ஷூராவின் அனுமதி இல்லாமல் எந்த மாற்றங்களையும் அறிமுகப்படுத்தக் கூடாது.

(3) மௌலானா ஸஃத், தாருல் உலூம் தேவ்பந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ள கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பரப்புவதை நிறுத்த வேண்டும். தாருல் உலூம் தேவ்பந்துடன் நல்லுறவை உருவாக்க அவரால் முடிந்தவற்றையெல்லாம் செய்ய வேண்டும்.”

கையொப்பமிட்டவர்கள்: ஹாஜி அப்துல் வஹாப் (ரஹ்), மௌலானா இப்ராஹிம் தேவ்லா சாஹிப் (தா.ப), மௌலானா ஜுஹைருல் ஹசன் சாஹிப் (தா.ப), மௌலானா அப்துர் ரஹ்மான் மும்பை, மௌலானா உபைதுல்லா குர்ஷித், பாய் ஹஷ்மத் அலி, சௌத்ரி முஹம்மத் ரஃபீக், மௌலானா முஹம்மத் யாகூப் சாஹிப், மௌலானா அஹ்மத் லாத் சாஹிப் (தா.ப), மௌலானா நஜூருர் ரஹ்மான், மௌலானா ஜியா உல் ஹக் சாஹிப், மௌலானா உஸ்மான் கக்கோசி, மௌலானா இஹ்ஸானுல் ஹக், மௌலானா அஹ்மத் பட்லா, டாக்டர் ரூஹுல்லா, பாய் பாபர் ஜாவித், மியான் முஹம்மத் அன்வர், பாய் இர்ஷாத் அஹ்மத், பாய் ஃபிடா முஹம்மத் பிராசா, பேராசிரியர் முஹம்மத் ஷாஹித், பாய் பக்த் முநீர், பாய் சுல்தான் இக்பால், பாய் நௌஷாத் பைக், பாய் முஹம்மத் அலி, டாக்டர் மன்சூர் அஹ்மத்..

மூ来源: ஹாஜி அப்துல் வஹாப் ஒருங்கட்சி கடிதம்

2018 நவம்பர் 18 –ஹாஜி அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதன் பின்னர் வஃபாத்தானார்கள். இந்த மரணம் புனித நபி (ஸல்) அவர்களின் மறைவை பிரதிபலிக்கின்றது, ஏனெனில் அவர்களும் அதிகக் காய்ச்சலின் காரணமாகவே வஃபாத்தானார்கள். ஹாஜி சாஹிப் மறைந்த போது அவர்களது வயது 96 ஆகும்.

ஹாஜி அப்துல் வஹாப் (ரஹ்) அவர்களின் ஜனாஸா தொழுகையை 90 வயதான மௌலானா நஸ்ரூர் ரஹ்மான் அவர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஹாஜி அப்துல் வஹாப் (ரஹ்) அவர்களின் ஜனாஸா தொழுகையில் பங்கேற்றனர்.

ஹாஜி அப்துல் வாஹப் நல்லடக்கம்
ஹாஜி அப்துல் வாஹப் நல்லடக்கம்

ஹாஜி அப்துல் வஹாப் (ரஹ்) அவர்களின் கப்ரில் இருந்து ஒரு அழகான வாசனை பரவியது என்று பலர் சாட்சியமிட்டுள்ளனர். மௌலானா மக்கீ அல் ஹிஜாசி அவர்கள் இதைப்பற்றி , “அந்த வாசனை அல்லாஹு தஆலாவின் சாட்சியமாக இருக்கின்றது, அது ஹாஜி அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் ஒரு உண்மையான மனிதர் (அஹ்லுல் ஹக்) எனும் செய்தியை எங்களுக்கு காட்டுகிறது. தப்லீக் ஜமாஅத் பிரச்னைகளின் போது அவர் காட்டிய உறுதியினால் பலர் அவரைப் மறுத்து அவதூறாக பேசியிருந்தாலும், அந்த வாசனை அவரது உண்மைத்தன்மையை நிரூபிக்கின்றது” என்று கூறினார்கள்.

தாயகம்: என் ஹாஜி சாஹிப் (ஹாஜி அப்துல் வஹாபின் வாழ்க்கை)

தொடரும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Email Facebook