மௌலானா இப்ராஹிம் தேவ்லா அவர்களின் கடிதம்

மௌலானா இபராஹீம் தேவ்லா (தா.ப), ஹாஜி அப்துல் வஹாப் சாஹிப் (ரஹ்) அவர்களுக்கு பிறகு, தற்போதைய தப்லீக் ஆலமி ஷூராவின் உயர்ந்த இச்தானத்தில் உள்ளார். மௌலானா இப்ராஹீம் சாஹிப் அவர்கள் 1933 ஏப்ரல் 25ஆம் திகதி பிறந்தவர். ஜனவரி 2024ல் இல் அவர்களுக்கு 90 வயதாகிறது.

தஃவதுத் தப்லீக் ஜமாஅதுடைய வேலையில் சுமார் 60 ஆண்டுகள் தன் வாழ்நாளை அற்பணித்து  நிஜாமுதீனில் அமைந்துள்ள பங்களாவாலி மஸ்ஜிதில் சுமார் 40 ஆண்டுகள் தங்கி தஃவத் தப்லீக் வேலையை செய்த தற்கால பெரியார்களில் ஒருவரான ஹஜ்ரத் மௌலானா மௌலவி இப்ராஹிம் தேவ்லா சாஹிப் (தா.ப) அவர்கள் இந்த வேலை சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை கடிதத்தின் மூலம் சமூகத்திற்கு முழு உலக தப்லீக் சாத்திகளுக்காக அவர்கள் கொடுத்த கடிதத்தை தமிழில் உங்களுக்கு தருகின்றோம்

மௌலானா இப்ராஹிம் தேவ்லா

Read here: Full History of Tabligh from Authentic Sources

بسم الله الرحمن الرحيم.

12.08.2016. மாலையில், எனது பங்களாவாலி மஸ்ஜிதில் இருந்து குஜராத் திரும்புவது தொடர்பாக தற்போது பல்வேறு செய்திகள் உலா வந்து கொன்டிருக்கின்றன. அதில் பெரும்பாலானவைகள் பொய்யாகவும் உண்மைக்கு புறம்பானவையாகவும் உள்ளன. எனவே உண்மை என்னவென்பதை நானே தெளிவு படுத்துவது உசிதமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

*1. இவ்வாண்டு 2016 ரமழான் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பங்களாவாலி மஸ்ஜித் நிஜாமுதீனில் என்னென்ன நிகழ்வுகள் நடந்துக் கொன்டு இருக்கின்றனவோ மேலும் சில நாட்கள் முன்னதாக எனது முன்னிலையிலேயே என்ன நடந்ததோ இந்த பொருத்தமில்லாத நிகழ்வுகளால் இந்த பரக்கத் பொருந்திய வேலையின் வடிவம், தோற்றம் சீர் குலைந்துக்கொண்டு இருக்கிறது என்பதும் வேலையில் பல்லாண்டுகளாக நீடித்து வந்த பரிசுத்த தன்மை பாலடைவதும் கண் முன்னே தெரிகிறது.
இதன் காரணமாக முழு உலகில் வேலை செய்யும் சகோதரர்கள் , அல்லாஹ்வின் நெருக்கம் பெற்ற உளமாக்கள் மேலும் கண்ணியமிக்க ஷேஃக்மார்கள் மிகவும் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையின் காரணமாக வேலையின் ஒற்றுமை தன்மை பாதிக்கப்படும் எல்லையினை அடைந்து விட்டது. இன்னொரு பக்கம் பங்களாவாலி மஸ்ஜிதை ஒரு குறிப்பிட்ட கூட்டம் ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் தவறான விஷயங்களையும் சரியானவையாக நம்பவைக்க பெரும் முயற்சி செய்கின்றனர். மேலும் சீர் திருத்துவதற்கான எந்தவொரு உசித முயற்சிக்கும் தடையாக உள்ளனர். வேலைக்கு இதுவொரு பெரும் அபாயகரமான கடினமான கட்டத்தை கடந்துள்ளது. இதை மிகவும் புத்திசாலித்தனமாக கையாள்வதே மிக்க அவசியம். எவர்கள் இந்நேரத்தில் மர்கஸில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் வேலை தனது இயல்பு படி நடந்து கொன்டு இருக்கிறது என்றும் எண்ணுவார்களோ, அது முற்றிலும் தவறாகவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பாகவும் உள்ளன.

2. இவ்வாண்டு ஈதுல்-பித்ரிற்குப் பிறகு நான் எனது உடல் நிலை, சிரமத்தையும் பொருட்படுத்தாமல் பங்களாவாலி மஸ்ஜித் செல்ல முடிவெடுத்திருந்தேன். செல்லும் முன் பரஸ்பரம் விளங்கிக் கொள்ளும் மூலம் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என நினைத்தேன் . எனவே நான் தற்போதைய நிகழ்வுகள் தொடர்பாக பல முறை மௌலவி ச’அத் சாஹிப் அவர்களுடன் நேரடியாகவே பேசினேன், ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் எந்த இலாபகரமான முடிவும் ஏற்படவில்லை . மாறாக நான் நிஜாமுதீனில் தங்குவது மற்றும் தினசரி மஷூராவில் கலந்து கொள்வதின் காரணமாக நான் தற்போதைய தர்தீப் மற்றும் முறைகளை ஏற்றுக்கொன்டு விட்டேன் என்ற விஷயம் பரப்பப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் என்னைப் பொறுத்த வரை தற்போதைய காலகட்டத்தில் வேலையைப் பற்றிய எனது நிலைப்பாட்டையும் அபிப்பிராயத்தையும் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தீனில் விட்டுக் கொடுத்ததாக கருதப்படும். எனவே பின் வரும் வார்த்தைகளில் முழு உலகத்தில் வேலை செய்யும் சகோதரர்களிடம் எனது, விளக்கத்தை, நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவான விதத்தில் விபரிக்க விரும்புகிறேன். தற்சமயம் தஃவத் தின் முபாரக்கான வேலையின் வட்டம், முழு உலகில் வியாபித்து பரவி விட்டது. இலட்சக்கணக்கில் மக்கள் இவ் வேலையில் இணைந்துள்ளனர். வெவ்வேறு பட்ட தன்மை மற்றும் பல்வேறு கொள்கையுடைய மக்கள் இவ் வேலையோடு மனமொத்து உள்ளனர்,
இவ்வளவு பரந்து விரிந்த வேலையின் சுமையை சுமப்பதற்காக பழைய பெரியவர்களின் கூட்டுறவில் இருந்து தோழமைப் பெற்ற ஒரு நம்பகரமான ஜமாஅத் தேவை என்பது கட்டாயம் அவசியமானது! அவர்கள் இறையச்சம், அமானிதத்தன்மை , வேலைக்கான தூய எண்ணம், உழைப்பு மற்றும் தியாக அடிப்படையில் வேலை செய்பவர்கள், அனைவரிடத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக இருப்பார்கள். இந்த ஜமாஅத் பரஸ்பரம் மற்றும் மஷூராவுடன், ஒன்று பட்டு  வேலையை நடத்தாட்டுவார்கள். இது அன்றி வேலையை சரியான திசையில் செழுத்துவது கடினமானதாகும். மேலும் முழு உலகிலும் வேலை செய்வோர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுவதும் மிகச்சிரமமானதாகும். எனவே மௌலானா ஜுபைருல் ஹஸன் (ரஹ்) அவர்களின் ஜீவிய காலத்திலேயே சில முக்கியமான பிரச்சினைகள் முன்வந்த நேரத்தில் நான் பலமுறை ஹஜ்ரத் ஜீ இனாமுல் ஹஸன் ( ரஹ்) அவர்களால் உருவாக்கப்பட்ட ஷூராவில் உலகலாவிய அடிப்படையில் சில நபர்களை அதிகப்படுத்தும் பேச்சை முன்வைத்தேன். மேலும் வருங்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வும் இதில் தான் உள்ளது என்ற வேண்டுகோளையும் முன் வைத்தேன் .தங்களின் கடைசி நாட்களில் ஹஜ்ரத் மர்ஹூம் (ரஹி) அவர்கள் அதற்காக தயாராகவும் ஆகிவிட்டார்கள். ஆனால் திடீரென அவர்களின் மரணத்தருவாய் வந்துவிட்டது. அல்லாஹு தஆலா அவர்களை மன்னித்து சுவனத்தில் நுழைய வைப்பானாக, ஆமீன்.

மௌலானாவின் வபாத்தின் பின்பும் கூட நாங்கள் வேலை செய்யும் பழைய சகோதரர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு விளக்கமான கடிதம் மௌலானா சா’த் சாஹிப் அவர்களின் முன் வைத்தோம். அதில் நாம் வேலையின் தற்கால தர்தீப் மற்றும் முறை தொடர்பாக நமது ஆட்சோபனையை வெளிப்படுத்தினோம். மேலும் பிரச்சினைகளின் தீர்விற்காக ஷூரா அமைக்க வேண்டிய விடயதையும் முன் வைத்தோம், ஆனால் வருத்தத்திற்குரிய விடயம் என்றவென்றால் எந்தவித பலனும் ஏற்படவில்லை! மேலும் தற்போதைய வேலையின் நிலை சீர் குலைந்து கொண்டே செல்கிறது. பிறகு சென்ற ஆண்டு, நவம்பர், 2015 உலகின் பழையவர்களின் முன்னிலையில் ஷூரா ஜமாஅத் அமைக்கப்பட்ட பிறகு மீண்டும் மௌலானா ஸா’த் சாஹிப் அவர்களிடத்தில் தாங்கள் இந்த ஷூராவை ஏற்கும் படியும் إنشاء الله எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்றும் பேசினேன், ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள். இதன் காரணமாக முழு உலகின் வேலையிலும் குழப்பம் வந்துவிட்டது. மேலும் தற்கால நிலை மிகவும் கடினமாக மோசமாக ஆகிவிட்டது. இப்போதும் கூட என்னிடத்தில் பிரச்சினைகளின் தீர்வு இதுதான்.. அதாவது இந்த ஷூராவை ஏற்றுக் கொள்வது, மேலும் வேலையின் தேவைகளை ஷூரா ஜமாஅத்தைக் கொன்டு பூர்த்தி செய்வது.
வேலையின் தர்தீப் மற்றும் முறைகளின் தொடர்பாக முந்தைய மூன்று பெரியார்களின் காலகட்டத்தில் எந்த விஷயங்கள் முடிவு செய்யப்பட்டனவோ அவற்றை அதே நிலையில் தொடர வேண்டும். அவற்றில் ஏதேனும் மாற்றங்களுக்கு தேவையேட்பட்டல் ஷூராவின் ஒன்றுபட்ட முடிவின் பிறகே அவற்றை நடை முறைப்படுத்த வேண்டும். தற்போது ஒற்றுமையிள் பிளவு ஏற்பட்டதற்கு மிக முக்கியமான காரணம், புதிய விஷயங்கள், புதிய தர்தீபுகளை ஷூரா மற்றும் பழையவர்களின் ஆலோசனை மற்றும் ஒப்புதல்கள் இன்றி செயல்படுத்துவதாகும்.
தீன் மற்றும் ஷரீ’அத்தின் விளக்கம், வியாக்கியானங்கள் தொடர்பாக இந்த ஜமாஅத் ஒப்புக்க் கொள்ளப்பட்ட பெரும்பான்மை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையை பின் பற்றக் கூடியது. சங்கை மிகு குர்ஆனுடைய ஏதேனும் ஒரு ஆயத்திற்கு விரிவுரை சொல்வதில் ஒப்புக் கொள்ளப்பட்ட பெரும்பான்மை முfபஸ்ஸிரீன்கள் ஹதீஸ்களின் விளக்கவுரையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெரும்பான்மை முஹத்திஸீன்கள் , ஹபீப் நபி மற்றும் சஹாபாக்களின் வரலாறுகளில் இருந்து சட்டம் எடுப்பதில் ஒப்புக்கொள்ள பட்ட பெரும்பான்மை fபுகஹாக்களின் அபிப்பிராயங்களையும் இந்த ஜமாஅத் பின்பற்றும். முந்தைய மூன்று கால கட்டங்களிலும் நமது பெரியோர்கள் இப்படியே பின்பற்றினார்கள். அதே முறையில் , ஏனென்றால்.. இம்முறைக்கு மாறு படுவதால் தீனில் மாற்றம் உண்டாக்கும் வாசல்கள் திறந்து விடும்.

இந்த வேலையில் பயான்களை பொருத்த வரையில் ஆரம்பத்தில் இருந்தே பேணுதலான முறையே பின்பற்றப் பட்டது. ஆதாரமற்ற பேச்சுக்கள், கொள்கை, சுய நிர்ணயப் பேச்சுக்கள் , தவறான முறையில் ஆதாரம் எடுப்பது, அவைகளில் இருந்து இயன்றளவு தற்காத்துக் கொள்ள முயற்சி செய்யப்பட்டது. எனவே 6 தன்மைகளின் வட்டத்துக்குள்ளேயே பயான்களை அமைத்துப் பேச வலியுறுத்தப்பட்டது. எந்தவொரு ஆயத் மற்றும் ஹதீஸின் விளக்கத்திற்காக அந்தந்தக்கால அங்கீகாரமுள்ள உலமாக்களின் மூலம் பயன்பெற வலியுறுத்தப்பட்டது. மறுத்துரைப்பது, குரைப் பேசுவது, விவாதம் செய்வது, கொள்கை, மஸாஇல்கள் , தற்கால நிலைமைகள் , இவைகளை விட்டும் தவிர்ந்தே நம் பழையவர்கள் பேசி வந்திருக்கிறார்கள். வேறு எந்த தீனின் தனி நபர்கள் மற்றும் பிற ஜமாஅத்துகளைப் பற்றி குறை பேசுவது, விமர்சிப்பதை விட்டும் விலகி இருப்பதே இவ் வேலையின் முக்கிய உஸூலாகும், அடிப்படையாகும்.
ஆனால் தற்காலத்தில் பல வேலை செய்யும் சகோதரர்கள், முக்கிய பொறுப்பாளிகள், பயான்களில் பழைய வட்டத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். குறிப்பாக சஹாபாக்களின் வரலாறுகளைக் கொன்டு தவறான முறையில் ஆதாரம் எடுப்பது, தீனுடைய பிற ஜமாஅத்துகளைப் பற்றி குறை சொல்வது, விமர்சிப்பது அதிக அளவில் நிகழ்வதை நாம் கேள்விப் படுகிறோம்.இவ்விஷயங்களையெல்லாம் நான் ஆரம்ப நாளில் இருந்தே ஒப்புக் கொள்பவனாகவோ ஆதரிப்பவனாகவோ உடன்பட்டவனாகவோ இல்லை. மேலும் பலமுறை இது தொடர்பாக நான் சூசகமாக நேர் முரணான முறையில் சுட்டிக் காட்டிக் கொன்டே இருந்தேன். ஆனால் எப்போது பிரச்சினை எல்லை மீறி போய்விட்டதோ மேலும் அடியேன் நிஜாமுதீனில் தங்குதல் பற்றி மக்கள் தவறான அர்த்தம் கொள்ள முனைந்தார்களோ- அதாவது நான் வேலையின் தற்போதைய முறையை, தர்தீபை ஏற்றுக் கொன்டிருக்கிறேன் என்பதாக . மேலும் நிஜாமுதீன், பங்களாவாலி மஸ்ஜிதில் தற்கால நிலைமைகளின் காரணமாக நான் மிகவும் பின்னடைவை உணர்ந்தேனோ அப்பொழுதே நான் பலநாட்களின் இஸ்திகாராவிற்குப் பிறகு வேலை செய்பவர்களின் முன்னால் எனது விளக்கத்தை, நிலை பாட்டை தெளிவான வார்த்தைகளால் வெளிப்படுத்த முடிவு செய்தேன் .

எப்போது நிலமைகள் சீராகி விடுமோ இந்த அடியேன் மீண்டும் வருவதில் சற்றும் யோசிக்க மாட்டேன். எனது குஜராத் திரும்புதல் பிரிவின் பேரில் ஏற்பட்டது அல்ல. மாறாக வேலையின் பாதுகாப்பு, விட்டுக் கொடுத்தலை விட்டும் தப்பிப்பதற்காக ஏற்பட்டது. எனக்கும் அல்லாஹ் விடம் பதில் சொல்ல வேண்டியுள்ளது. அல்லாஹ் வேலையையும் வேலை செய்பவர்களையும் பாதுகாப்பானாக.

அடியேன் இப்ராஹிம் தேவ்லா .

ஆகஸ்ட். 15. 2016. திங்கட்கிழமை.

தேவ்லா, குஜராத்.

blank

blank

அடுத்தது: உண்மையான மானியங்களை நன்கு வாசிக்கவும்

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Facebook Facebook