அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
தாருல் உலூம் தியோபந்தின் ஃபத்வா மவுலானா முஹம்மது ஸாத் ஸாஹிபின் தவறான கருத்துகள் மற்றும் எண்ணங்கள் தொடர்பாக, ஒருமித்த ஆதரவும் அங்கீகாரமும்
நாம் அவனைப் புகழ்ந்து, அவனுடைய உயர்ந்த தூதருக்கு ஸலவாத் அனுப்புகிறோம். அதன் பின்:
மவுலானா முஹம்மது ஸாத் ஸாஹிப் கந்தலவியின் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் பெரும்பான்மையினரின் நிலைப்பாட்டிற்கு முரணான அறிக்கைகள் வெளிவந்ததால், தாருல் உலூம் தியோபந்தின் பெரியார்கள் அவருக்கு எழுத்துப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தனது அறிக்கைகளை திரும்பப் பெற மூன்று நாள் அவகாசம் அளித்தனர். எனினும், அவர் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறத் தவறியதால், முஸ்லிம் உம்மத் வழிதவறாமல் காக்கும் பொருட்டு தாருல் உலூம் தியோபந்த் அவருடைய அறிக்கைகள் வழிகேட்டை நோக்கி இட்டுச்செல்பவை என ஒருமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. மசாஹிர் உலூம் சஹாரன்பூரின் கூட்டாலோசனைக் குழு உறுப்பினர்களும் இந்த ஃபத்வாவை எழுத்துப்பூர்வமாக ஆதரித்துள்ளனர்.
நாமும் இந்த முடிவை ஆதரிக்கிறோம், மேலும் மவுலானா முஹம்மது ஸாத் ஸாஹிபின் அறிக்கைகளை அவர் தமது சர்ச்சைக்குரிய கருத்துகளை திரும்பப் பெறும் வரை கேட்பதிலும் மேற்கோள் காட்டுவதிலும் எச்சரிக்கையாக இருக்குமாறு நமது மார்க்க சகோதரர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். மூன்று பெரியோர்களான ஹஸ்ரத் மவுலானா முஹம்மது இல்யாஸ் ஸாஹிப் கந்தலவி, ஹஸ்ரத் மவுலானா முஹம்மது யூசுஃப் ஸாஹிப் கந்தலவி, மற்றும் ஹஸ்ரத் மவுலானா இனாமுல் ஹசன் ஸாஹிப் ஆகியோரின் வழிமுறையில் தப்லீக் பணியைத் தொடருமாறு அவர்களை வலியுறுத்துகிறோம்.
கையொப்பம் #4 – தாருல் இஃப்தா மதரஸா இஹ்யாஉல் உலூம், வாணம்பாடி, இக்பால் கான்


