மௌலானா யாகூப் அவர்களின் கடிதம்..

இக் கடிதத்தை மௌலானா யாகூப் சாஹிப் அவர்கள் நிஜாமுதீன் மற்றும் மௌலானா ஸாத் அவர்களை சூழவுள்ள விவகாரங்களைக் கருத்தில் கொண்டு வெளியிட்டதாகும்.

மௌலானா யாகூப் சாஹிப் (ரஹ்) அவர்கள் வயதில் மூத்தவராகவும் மௌலானா ஸாத் சாஹிப் மற்றும் அவர்களின் தந்தை மௌலானா ஹாரூன் அவர்களின் ஆசான் ஆக இருந்தார்கள்.மேலும் தங்களுடைய வாழ்க்கையில் 50 வருட காலம் தஃவத்துடைய உழைப்பிலும் நிஜாமுதீன் மர்கஸில் முழுநேர முகீமாகவும் இருந்தார்கள்.

மௌலானா யாகூப் சாஹிப் அவர்கள் 2019ம் ஆண்டு இரையடி சேர்ந்தார்கள்!
انا لله وانا اليه راجعون..

blank
blank
மவ்லானா யாகூப்

28ம் ஆகஸ்ட் 2016

மவ்லானா யாகூபின் இருந்து.

நிஜாமுதீன் இல் அடியேன் 15 வருடங்களுக்கு மேலாக ஹஜ்ரத் மௌலானா யூசுப் சாஹிப் (ரஹ்) அவர்களுடனும் அதற்கு பிறகு கிட்டத்தட்ட 30 வருடம் ஹஜ்ரத் ஜீ இனாமுல்ஹஸன் சாஹிப் (ரஹ்) அவர்களுடனும் இருந்துள்ளேன். ஏறக்குறைய 50 வருட நீன்ட காலமாக இந்த இரண்டு பெரியார்களுடனும் மர்கசிலும் ஸஃபர், பயணத்திலும் அருகில் இருக்கும் பெரும் வாய்ப்பை அல்லாஹு தஆலா எனக்கு வழங்கினான்.

இந்த இரு பெரியார்களின் வழிகாட்டடுதளாளும் கண்கானிப்பினாலும் இந்த உயர்ந்த உன்னதமான வேலையை செய்வதற்கு அல்லாஹ் நல்லருள் புரிந்தான்.

இதன் பரக்கத்தினால் அடியேன் முழு சிந்தனையுடனும் அமானிதத்துடனும் இந்த விஷயத்தை உங்களுக்கு முன்னால் எடுத்துச் சொல்கிறேன். இந்த வேலையை இரு பெரியார்களும் எந்த அமைப்பில் நடத்தினார்களோ அதைவிட்டும் விலகிவிட்டது, அகன்றுவிட்டது! நம்முடைய இந்த இரு பெரியார்களும் எல்லோராலும் ஏகோபித்த ஒருமித்த கருத்தினால் அமீராக இருந்தார்கள், ஆனால் ஒருபோதும் அவர்கள் அமீர் பதவியை வாதிட வில்லை, ஒருபோதும் அதிகாரத் தோரணையில் பேசியதுமில்லை. தன் சுய கருத்தைக் கொண்டு அவர்கள் இந்த வேலையை நடத்தவுமில்லை. எப்பொழுதும் மஷூராவிற்கு அடிபணியக் கூடியவர்களாகவே இருந்தார்கள்.ஏதாவது ஒரு விஷயத்தை, உஸூலை நடைமுறைப்படுத்த நாடினால் தன் உடன் இருப்பவர்களின் ஒன்றுபட்ட ஒருமித்த கருத்தின் பின்பே நடைமுறைப்படுத்துவார்கள். அமீரானதற்கு பின்பும் இதே நிலை தான் நீடித்தது.

ஆனால் இன்று இந்த விஷயம் தலைகீழாக மாறிவிட்டது! அமீர் பொறுப்பை வேண்டப்படுகிறது, கேட்கப்படுகிறது.எவர் பேச்சை கேட்கவில்லையோ அவரை நிர்ப்பந்தித்து ஏற்றுக்கொள்ள வைக்க வழிகள் கையாளப்படுகிறது. இதன் முடிவாக நிஜாமுதீன் இல் திட்டுதல, வசைப் பாடுதல், கூச்சல், குழப்பம்,எல்லாவற்றிற்கும் மேலாக அடி உதை என்ற நிலை வரை சென்று விட்டது. நிஜாமுதீன் இல் எந்த உம்மத்தின் ஃபிக்ர் இஸ்லாஹ், ஆஃகிராவின் கவலை உன்டாக்கப்பட்டதோ அந்த நிலைமைக்கு மாற்றமாக தற்போது புறம் பேசுதல், இட்டுக் கட்டுதல், வேலையை சரியான அமைப்பில் செய்பவர்களை தரம் தாழ்த்தி ஒதுக்கி ஓரங்கட்டப்படக்கூடிய வழிகள் கையாளப்படுகிறது. மர்கஸிற்கு வந்து மக்கள் நேர்வழி அடைவதற்கு பகரமாக வழிகேட்டின் பக்கம் செல்லக்கூடிய கவலையான நிலை தென்படுகிறது.இதனால் வேலையின் ரூஹானிய்யத்- உயிரோட்டம் சென்று விட்டது. இன்னும் ம் இந்த இடம் தன் இஸ்லாஹ்,     ஆகிராவின் ஃபிக்ர்- உம்மத்தின்  கவலையை தரக்கூடியதாக இருந்ததோ அதைவிட்டும் தூரமாகி செல்கிறது. இன்னும் தன் மனோ இச்சையை பூர்த்தி செய்யும் இடமாக மாறிவிட்டது. இதா’அத்- வழிபடுதல் என்ற கோஷம் எழுப்பி “தனக்கு வழிப்படாவிட்டால் வெற்றி பெறவே முடியாது, அவர் எவ்வளவு பெரிய தியாகியாக முஃகல்லிஸாக இருந்தாலும் சரி, எங்களுக்கு கட்டுப்பட்டாலே வெற்றி” என்ற கோஷம் எழுப்ப்படுகிறது.

எந்தவிதத்திலும் எப்பொழுதும் மாற்றுக்கருத்து அபிப்பிராயம் தெரிவிக்கக்கூடாது, அவர்கள் எவ்வளவு பெரிய தியாகியாக முஃக்லிஸாக இருந்தாலும் சரியே என்ற சிந்தனை விதைக்கப்படுகிறது. இதனால் தான் பை’அத் பொதுப்படையாக  வெளிரங்கமாக கொடுக்கும் நிலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஹஜ்ரத் ஜீ அவர்களின் ஷூராவின் ஏகோபித்த கருத்தின் படி மர்கஸில் பொதுப்படையான பை’அத் அனுமதி இல்லை என்பது தான் ஏகோபித்த முடிவாகும்.இதை பற்றி உன்டான விபரம் உள்ள பிரதிகள் ஹஜ்ரத் ஜீ (ரஹி) அவர்களின் ஷூராவின்  கையொப்பத்தோடு உள்ளது.

முன் சென்ற பெரியார்களின் காலத்தில் இல்லாத புதிய விஷயங்கள் மஷூரா இல்லாமலேயே நடைமுறைப்படுத்த படுகிறது.

அதில் ஒன்று *தஃவத், தாலீம், இஸ்திக்பால் என்பது – இது ஒரு புதிய நடைமுறை,  இது பெரியார்களின் காலத்தில் இல்லை, இதற்குப் பெயர் தற்போது ஆபாதி மஸ்ஜித் என்றாகிவிட்டது.இதனால் நபர் நபராக வீடு வீடாக சென்று சந்திக்கும் முயற்சி உமூமி கஸ்தின் அஹ்மியத் மகத்துவம் குறைந்து விட்டது.

*இரண்டாவது – முக்கியஸ்தர்கள் மற்றைய தபாகா துறைவாலியான மிஹ்னத் உழைப்பை நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த உழைப்பு பெரியார்களின் காலத்தில் இருந்தது. இந்த முக்கியஸ்தர்களின் துறைவார்களின் மீது உழைப்பு செய்ததின் பலன் மிகத் தெளிவானது. இந்த துறைவாரியானவர்களின் உழைப்பை தடுப்பதற்கும் ஆபாதீ மஸ்ஜித் என்ற அமலை செயல் படுத்தவும் ஹதீஸ்களில் இருந்து தவறான முறையில் ஆதாரம் கூறப்படுகிறது.

மூன்றாவது – முன்தஃகப் அஹாதீஸ், மௌலானா யூசுப் சாஹிப் (ரஹ்) அவர்கள் இது சம்பந்தமாக ஒரு பொழுதும் சமிக்ஞையாகவோ சாடைமாடையாகவோ இப்படியான கருத்தைக் கூறவேயில்லை. அமல்களின் சிறப்பை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி அந்த இடத்தில் முன்தஃகப் அஹாதீஸை கொன்டு வர பெரும் முயற்சி செய்யப்படுகிறது.

*நான்காவது– பெண்களின் ஐந்து அமல், இவ்வாறு புதுப்புது நடைமுறைகளை உன்டாக்கி வேலை செய்யும் சாத்திகளின் சிந்தனைகள் குழப்பத்தில் ஆழ்த்தப்படுகிறது. எவர் இந்த விஷயத்தை செயல்படுத்த வில்லையோ , எந்த பகுதியில் செயல்படுத்த படவில்லையோ அவர்களை நிஜாமுதீனின் தர்தீபில் வேலை செய்யவில்லை என்று முத்திரை குத்தப்படுகிறது. மாறாக இது நிஜாமுதீன் தர்தீப் இல்லை, மாறாக இது ஒரு தனி நபர் ஹஜ்ரத் மௌலானா ஸாத் சாஹிப் அவர்களின் தர்தீப் ஆகும்!

நிஜாமுதீனின் அனைத்து மஜ்லிஸ்களும் அவர்களுடையதாகவே ஆகிவிட்டது.இன்னும் நிஜாமுதீன் வரக்கூடிய மக்களின் சிந்தனைகளை இவ்வாறு மாற்றப்படுகிறது – அதாவது “எவர்கள் நிஜாமுதீனின் தர்தீபை நடைமுறை படுத்தவில்லையோ அப்படிப்பட்ட பொறுப்புதாரிகளின் பேச்சை கேட்காதீர்கள்” என்பதாக..ரவாங்கீயிலும் புதிய தர்தீபை கூறி வெளியாக்குகிறார்கள். இது போன்ற ரவாங்கி பயான்களையும் புதிய தர்தீபை எவர் கூறுவாரோ அவரையே முடிவு செய்யப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு பகுதியிலும் கருத்து வேறுபாடு இரு சிந்தனை உடையவர்கள் என்ற நிலை உன்டாகி விட்டது, இதனால் பழையவர்கள் எல்லாம் நிஜாமுதீனின் பேச்சை ஏற்க மறுக்கின்றனர் என்று புதியவர்களும் , மஷூராவில் முடிவு செய்யப்படாத புதிய புதிய விஷயத்தை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்று பழையவர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளாகி விட்டார்கள். இதனால் இந்த வேலை அடிப்படையை விட்டு அகன்று சென்றுகொன்டு இருக்கிறது.இதனால் எல்லா இடங்களிலும் கருத்து வேறுபாடு, குழப்பம் ,குரோதம், குதர்க்கம் உண்டாகி விட்டது.

மறுமையின் சிந்தனை, தீன் பக்கம் உம்மத்தின் கவலை, தன் சீர்திருத்த பக்குவம் இந்த வேலையின் மையக்கருவாக இருந்த இந்த இலட்சியம் இழக்கப்பட்டு சிதைக்கப்பட்டுக் கொன்டு இருக்கிறது.

பெரியார்களின் சகவாசத்தை, தோழமையை  பெறாத சிலரால் மௌலானா ஸாத் அவர்கள் சூழப்பட்டுள்ளார்கள்.  அவர்கள் தனது சுய இலாபத்திற்காக மௌலானா ஸாத் அவர்களின் எல்லா விஷயத்தையும் பாராட்டுகிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள்.மௌலானா ஸாத் அவர்கள் தஃவத் தப்லீக் உடைய உழைப்பை விளங்கியதைப் போன்று முன் உள்ளவர்களிலும் தற்போது உள்ளவர்களிலும் யாருமே சரியாக விளங்கவில்லை என்ற ஒரு தவறான மாயையில் மூழ்கியுள்ளனர்.

மௌலானா ஸாத் அவர்கள் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும் பொழுது “நாம் குர்ஆன் ஹதீஸ் இன்னும் சீரத்தின் அடிப்படையில் உங்களுக்கு புரிய வைக்கின்றேன். இன்னும் இந்த வேலையை குர்ஆன் ஹதீஸ், சீரத்தின் ஒளியில் கொன்டு வர ஆசிக்கின்றேன்” என்று பாசாங்கு வார்த்தைகளை கூறி நமது முன்னோர்கள் செய்த  வேலை குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றம் போன்ற ஒரு மாயையை உன்டுபடுத்த முயற்சிக்கிறார், நமது முன்னோர்கள் இந்த வேலையை குர்ஆன் ஹதீஸின் ஆதார அடிப்படையில் சொல்லவில்லையா?

அவர் தனது பயானில் எந்த சலனமும் இன்றி குறை கூறுவது, குத்திப் பேசுவது, கேவலப்படுத்துவது, ஏளனம் செய்வது, அதிகாரத் தோரணையில் பேசுவது, தனது சொந்த ஆய்வான புதிய புதிய  விழக்கத்தை கூறுவது வாடிக்கையாக ஆகிவிட்டது. இது நம்  முன்னோர்களின் போக்குக்கு நேர் முரனானது. தினமும் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி அரங்கேற்றப்படுகிறது.

இது எதை நோக்கி போகிறது என்று மிகுந்த கவலையிலும் திகைப்பிலும் உலமாக்களும் மஷா’இஃக் மார்களும் மூழ்கியுள்ளார்கள். இதே நிலை நீடித்தால் உலமாக்கள் இந்த வேலைக்கு எதிராக ஆகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

வேலையின் இஜ்திமாஇய்யத் மற்றும் அதனுடைய அமைப்பை பாதுகாக்க கடந்த  நவம்பர் 2015 ல் உலகத்தின் பழைய பொறுப்புதாரிகளின் மஷூராவில் ஹஜ்ரத் ஜீ அவர்களின் மூலம் உருவாக்கப்பட்ட அமைக்கப்ட்ட ஷுரா பூர்த்தியாக்கப்பட்டது.

அதிலே நானும் இருந்தேன். ஆனால் மௌலானா முஹம்மத் ஸாத் சாஹிப் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் திடுக்கத்தையும் ஏற்படுத்தியது. துன்யாவில் எந்த தீனுடைய துறையை சார்ந்த விஷயங்களும், எந்த மார்க்க நிறுவனங்களும் ஷூராவின் தலைமையில், கண்காணிப்பில், வழிகாட்டுதலில் இல்லாமல் நடக்கவில்லை, நடக்கவும் முடியாது!  அப்படியிருக்க  உம்மத்துடைய மிகப் பெரிய இந்த வேலையை ஒரு தனி நபரிடத்தில் ஒப்படைத்து,  அவர் தன் மனதுக்கு பொருத்தமானதை தன் மனோ இச்சைக்கும் தோதுவாக நடத்தாட்டுவது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் எந்த மனிதனும் தன் இயற்கையான பலவீனம் மற்றும் நஃப்ஸின் அழுக்குகளில் இருந்தும் நீங்கியவர் இல்லை. இந்த கருத்தை முன் வைத்து தான் மௌலானா முஹம்மத் இல்யாஸ் சாஹிப் (ரஹி) அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்..

“வரக்கூடிய காலங்களில் இந்த வேலையை ஒரு ஷூராவின் கண்காணிப்பிலேயே நடக்க வேண்டும்”

             நூல் மகாதிபே மௌலானா இல்யாஸ் (ரஹ்), ஆசிரியர் அபுல் ஹஸன் அலி அந்-நத்வி (ரஹி)

நான் இந்த கடிதத்தை அல்லாஹ்வின் கேள்விக்கணக்கு பயந்து எழுதுகிறேன். அல்லாஹு தஆலா நமக்கு இந்த வேலையை பெரியார்களின் வழிமுறையில் செய்வதற்கும் புதுப்புது விஷயங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கும் கிருபை செய்வானாக ஆமீன்!

அடியேன் முஹம்மத் யாகூப் சாஹிப்.

ஆகஸ்ட்.27.2016.

துல் கஃதா 23. 1437.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.


உருது கொபி:

blank
blank

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Facebook Facebook